பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/254

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

அகநானூறு - நித்திலக் கோவை


நக்கீரனார் (310, 340, 346, 369, 389)

நக்கீரனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார், மதுரை நக்கீரனார் என்றெல்லாம் இவர் பெயர் காணப்பெறும். திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை என்னும் இரு முழு நூற்களையும், சங்கத் தொகை நூற்களுள் மேலும் 35 செய்யுட் களையும் பாடியவர் இவர். இறையனார் களவியலுக்குத் திட்பநுட்பஞ் செறிந்த உரையினை ஆக்கி, அதனை அரங்கேற்றிய சிறப்பினை உடையவரும் இவர் ஆவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கரிகாற்சோழன், இருங்கோ வேண்மான் ஆகிய பலர் இவராற் பாடப்பெற்றவர் ஆவர்.இவர் வேறு நக்கீர தேவ நாயனார் என்ற பெயருடன் பதினோராம் திருமுறைக்கண் வரும் நூற்களைப் பாடியோர் வேறு.'செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன் பல்பூங்கானற்பவத்திரி, 'வடவர் தந்த வான் சேழ்வட்டம் குடபுல உறுப்பிற் கூட்டுபு நிகழ்த்திய வண்டிமிர் நறுஞ்சாந்து (340); 'மாடமலி மறுகின் கூடல் ஆங்கண், வெள்ளத்தானையொடு வேறுபுலத் திறுத்த கிள்ளிவளவன் நல்லமர் சாஅய்க், கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி ஏதின் மன்னர் ஊர்கொளக் கோதை மார்பன் உவகையிற் பெரிதே' (346), 'கடலந்தானைக் கைவண் சோழர் உறந்தையன்ன நிதியுடை நன்னகர்' (369); பல்பூஞ் சேக்கையிற் பகலும் துஞ்சார் மனைவயின் இருப்பவர். வானவரம்பன் நன்னாட்டு உம்பர்.... மலையிறந்தோரே (389) என்பன போன்ற பல சிறந்த செய்திகளையும் கருத்துக்களையும் இந்நூலில் வரும் இவர் செய்யுட்களுள் கண்டு இன்புறலாம்.

நரைமுடி நெட்டையார் (339)

நின்றமுடி நெட்டையார் எனவும் இவர் பெயர் வழங்கும். இவர் பாடியதாகக் காணப்பெறும் சங்கச் செய்யுள் இஃது ஒன்றேயாகும். உருவால் நெடியராயும், இளமையிலேயே நரைமுடி பெற்றவராயும் இருந்த காரணம் பற்றி இங்ஙனம் குறித்தனர் போலும். இந்தச் செய்யுள் காதற் செவ்வியினை மிகவும் சிறப்புற விளங்குவதாகும். "யாக்கைக்கு உயிர் இயைந்தன்ன நட்பின், அவ்வுயிர் வாழ்தல் அன்ன காதல், சாதல் அன்ன பிரிவு என்ற சொற்களை எண்ணியெண்ணி இன்புறலாம். மற்றும் ஆண்மைவாங்கக் காமந்தட்பக், கவைபடுநெஞ்சம் கட்கண் அசைய இருதலைக் கொள்ளி யிடைநின்று வருந்தி, ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்’ என்னும் தலைவனின் உள்ளமும் மறவாது நினைத்தற்கு உரியதாகும்.

நன்பலூர்ச் சிறுமேதாவியார் (394)

நன்பலூர் என்னும் ஊரினராகச் சிறு வயதிலேயே அறிவுத் திட்பத்துடன் விளங்கி, அதனால் இப்பெயர் பெற்றவர்