பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

அகநானூறு - நித்திலக் கோவை


மதுரை, அறுவை வாணிகன் இளவேட்டனார் (302)

மதுரைக்கண் அறுவைவாணிகராக விளங்கியவர் இவர். சங்கநூற்களுள் இவருடையவாகப் பன்னிரு செய்யுட்களைக் காணலாம். இவர் பாடல்களுள் பல அரிய செய்திகளையும் காணலாம். இச்செய்யுளுள், 'சிலம்பிற் போகிய செம்முக வாழை, அலங்கல் அந்தோடு அசைவளியுறு தொறும், பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும் நல்வரைநாடன்' என, இயற்கையின் நலத்தை இனிதாக எடுத்தியம்பும் திறனைக் கண்டு போற்றுக. -

மதுரை, இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் (348)

சேந்தன் என்பவரின் மகனாராகக் கூத்தன் என்னும் இயற்பெயர் உடையவராக இவரைக் கருதலாம். அன்றிச் சேந்தன் என்னும் இயற்பெயர் உடையவராகக் கூத்து அறிந்தவராக, அதன்கண் ஒரு பகுதிக்கு ஆசிரியத்தொழில் பூண்டவராகவும், கருதப்படுவர். இவராற் பாடப்பெற்றவை சங்க நூற்களுள் மூன்று செய்யுட்கள் ஆகும்.'கொடிச்சி பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக் குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது படாஅப் பைங்கண் பாடுபெற்று, ஒய்யென, மறம்புகல் மழகளிறு உறங்கும்' என இவர், குறிஞ்சிப் பண்ணின் இனிமையைக் குறிப்பர். (102 அகம்). இச்செய்யுளில் (348) குறமகளிர் உண்பதற்கான கள்ளினைத் தயாரிப்பது பற்றி விளக்கி உரைத்துள்ளனர் இவர். கள்ளுண்டு காவல் மறந்த நிலையினையும் காட்டிள்ளனர்.

மதுரை இளங்கெளசிகனார் (381)

மதுரையைச் சார்ந்தவரான இவர், பெயரமைதியினால் பார்ப்பனராகக் கொள்ளப்படுபவர் மதுரை இளங்கண்ணிக் கெளசிகனாரினும் வேறுபடுத்திக் காணற்கு இவரை ளங்கெளசிகனார் என்றவர் போலும் ‘எருவைச் சேவலின் ஈண்டுகிளைத் தொழுதி, பச்சூன் கொள்ளை சாற்றிப் பறை நிவந்து, செக்கர் வானின் விசும்பணி கொள்ளும்’ எனவும், வானவன் உடற்றிய ஒன்னாத் தெவ்வர் மன்னெயில்போலப் பெரும்பாழ் கொண்டமேனியள் எனவும், 'நிரையிதழ்க்குவளை எதிர்மலர் இணைப்போதென்ன அரிமத மழைக்கண்' எனவும், நயமுற இவர் உரைக்கும் திறத்தினை இச்செய்யுளிற் காணலாம்.

மதுரைக் கண்ணத்தனார் (360)

மதுரைப் புலவர்களுள் இவரும் ஒருவர் ஆவ்ர். கண்ணத்தனார் என்னும் பெயருடையவராகலாம். அந்திவானச் சிறப்பினை, “வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து உருவுடன் இயைந்த தோற்றம்போல” என மிகவும் செறிவுடன்