பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/269

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 257




சோழர் மருகன் (356) .

வல்லம் கிழவோனாக விளங்கியவன் இவன் ஆவான். இவனை, நற்றேர்க் கடும்பகட் டியானைச் சோழர் மருகன் நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்' என்பர் பரணர்.

சோழர் மறவன் பழையன் (326) இவன், சோழர்களின் படைத்தலைவருள் ஒருவனாகத் திகழ்ந்தவன்; போஒர் என்னும் ஊரின் தலைவன் ஆவான். 'போஒர் காவிரிக் கரைக்கண் இருந்தது. இவன் பகைவர் மேல் எறியும் வேலானது குறிபிழையாது சென்று அவரைக் கொல்லும் என்ற சிறப்பினை இச்செய்யுளுள் பரணர் குறிப்பிடுகின்றனர். நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை ஆகிய சேரர் தளபதிகளைக் களத்திற்கொன்று, முடிவில் களத்திலே வீழ்ந்துபட்ட வீரமறவன் இவன் என்று சான்றோர் போற்றுவார்கள்.

திதியன் (331)

இவன் திதியர்களுள் ஒருவன். மாமூலனாராற் பாடப் பெற்றவனாதலின் இமயவரம்பனின் காலத்தவனாகலாம். இவன் வேளிரோடு போரிடுதற் பொருட்டாகத் தன் வாளினை உருவிய செய்தி இச்செய்யுளுட் கூறப்பட்டுள்ளது.

திதியன் (பொதியிற் செல்வன்) (322) திதியர்களுள் பொதியில்மலைப் பகுதித் தலைவனாக விளங்கிய வேளிர் பெருமகன் இவன் என்பர். இச்செய்யுள் இத்திதியனது பேராண்மையினையும், இவனுக்கு உரித்தான பொதியிலின் வனப்பையும் கூறுகின்றது.

திரையன் (340) இவன் பவத்திரி என்னும் ஊருக்குத் தலைவனாகப் புகழுடன் விளங்கியவன் ஆவான். இவனை இச்செய்யுளுள் குறிப்பவர் நக்கீரனார் ஆவர். இவனைப்பற்றிக் குறிப்பிடும் மற்றொருவர் காட்டுர்கிழார் மகனார் கண்ணனார் ஆவார். இவனுடைய பெயரமைதி இவன் கடற்கரைப் பகுதி நாட்டின் தலைவனாக இருந்தவன் எனக் காட்டும் எனினும் அகம் 85ஆவது செய்யுள், இவனை, வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை' என்பதனால், இவன் அப் பகுதிக்கண் இருந்தவனாகலாம்.

தென்னவன் (342) தென்னவன் என்பது பாண்டியரின் பெயர்களுள் ஒன்று. இச்செய்யுளுள், 'பல் செருக் கடந்த செல்லறழ் தடக்கை, கெடாஅ நல்லிசைத் தென்னவன்' என்று குறிப்பிடுகின்றார். மதுரைக் கணக்காயனார். இவராற் போற்றப் பெற்றவன்