பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 15


பிரிவினால் வெதும்பியிருக்கும் நின்னுள்ளம், கோவலரின் தீங்குழல் ஒலிபோல் வாடையின் நடுக்கமும் சேர்ந்து வருத்தக் கனை எரி பிறக்கும் நிலையுற்றதானால் அதனைக் கண்டு யான் எவ்வாறு வாழ்வேனோ? எனத் தோழி தலைவியை நினைந்து இரங்குவாளாய்க் கூறுகின்றனள் என்க.

"தீங்குழல் கேட்டு” என்பதனால், இப்பேச்சு, தோழி. யருக்குள் மயங்கும் மாலைப்பொழுதில் நிகழ்ந்ததாதல் வேண்டும்.

மேற்கோள் : "இப்பாட்டினுள்ளே பெருமணல் உலகத்துப் பாலை வந்தது” எனக் குறிப்பிட்டு, உரிப்பொருள் அல்லன. மயங்கவும் பெறுமே என்னும் சூத்திரத்துக் காட்டி உரைப்பர் நச்சினார்க்கினியர்.

306. நின் செம்மல் இதுவோ?

பாடியவர் : மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். திணை : மருதம் துறை : தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது. (தலைவியை மறந்து சிலகாலம் பரத்தையின் உறவிலே ஈடுபட்டிருந்த ஒருவன், அவளில்லத்தை நாடி வருகிறான். அவ்விடத்தே, தோழிபால் தன் விருப்பத்தைக் கூறித் தலைவியை ஊடல் நீக்கித் தன்னுடனே இசைவிக்க வேண்டுகின்றான்.தோழி, அவனுடைய ஏவலை மறுப்பாளாகக் கூறுகிற தன்மையிலே அமைந்தது இச் செய்யுள்)

          பெரும்பெயர் மகிழ்ந: பேணா தகன்மோ!
          பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
          முட்கொம் பீங்கைத் துய்த்தலைப் புதுவீ
          ஈன்ற மாத்தின் இளந்தளிர் வருட
          ஆர்குருகு உறங்கும் நீர்சூழ் வளவயற் 5

          கழனிக கரும்பின் சாய்ப்புறம் ஊர்ந்து
          பழன யாமை பசுவெயிற் கொள்ளும்
          நெல்லுடை மறுகின் நன்னர் ஊர!
          இதுவோ மற்றுநின் செம்மல்? மாண்ட
          மதியேர் ஒள்நுதல் வயங்கிழை ஒருத்தி- 1O

          இகழ்ந்த சொல்லுஞ் சொல்லிச் சிவந்த
          ஆயிதழ் மழைக்கண் நோயுற நோக்கித்
          தண்ணறுங் கமழ்தார் பரீஇயினள் நும்மொடு
          ஊடினள் - சிறுதுணி செய்தெம்
          மணன்மலி மறுகின் இறந்திசி னோளே. 15

          பெரிதும் பெயர்பெற்றோனாகிய தலைவனே!