பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

அகநானூறு - நித்திலக் கோவை


பசும்பூண் பாண்டியன் ஆதலின், இச்செய்யுளுட் குறிக்கப் பெறும் தென்னவனும் அவனே யாகலாம்.

நன்னன் (349, 356, 372, 396) நன்னன் என்ற பெயருடையார் மூவராவர். அவர்க்ள் கடம்பின் பெருவாயில் நன்னன், பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேளான நன்னன், சேரரின் படைத் தளபதிகளுள் ஒருவனான நன்னன் ஆகியோர். இவர்களுள், ஏழிற் குன்றத்துக்கு உரியவனும் (349), பிரம்பு மலைக்கு உரியவனும் (356), குறிக்கப் பெற்றனர். மோசி கீரனார், இவன் இழந்த தன் தொல்புகழை நிலை நிறுத்தியனைக் குறிப்பிடு கின்றார். (372). பரணர் ஆஅய் எயினன் இவனுக்காக மிஞரிலியோடு பாழிப் பறந்தலைப் போரிலே உயிர்துறந்த செய்தியைக் குறிப்பிடுகின்றார் (396)


'பசும்பூண் பாண்டியன் (338) இப்பெயருடையன் ஒருவனைப் பரணர் (அகம் 162), மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் (அகம் 231) நக்கீரர் (253) ஆகியோர் கூறுகின்றனர். நக்கீரனார் இவன் கொங்கரை வெருட்டிய தனையும், அவர் நாடு பலவற்றையும் பாண்டியப் பேரரசுடன் இணைத் தனையும் குறிப்பிடுவர் (அகம் 253). இச் செய்யுளுள், கணக்காயனார், இவனை, "அறம் கடைப்பிடித்த செங்கோ லுடன், அமர் மறஞ்சாய்த்து எழுந்த வலனுயர் திணிதோள் பலர் புகழ் திருவிற் பசும்பூண் பாண்டியன்” என்கின்றனர்.

பசும்பூண் பொறையன் (303) இச்செய்யுளுள் பசும்பூண் பொறையன் என ஒளவையாராலும், 338-வது செய்யுளுள் வென்வேற் பொறையன், எனக் கணக்காயனாராலும் குறிக்கப்பெற்றவன் இவன். இவன் சேரர் குலத்து இரும்பொறை மரபினன் ஆதல் கொல்லி இவனுக்கு உரியதென இருவரும் கூறலாற் பொருந்தும்.

பழையன் மாறன் (345)

மோகூர்க்கண் இருந்த குறுநிலத் தலைவன் இவன். மோகூர்ப் பழையன் எனவும் குறிக்கப் பெற்றவன். வடுகர் துணையோடு வந்த கோசர்களை வென்று சிறந்தவன். இச் செய்யுளுள் கூடற் பறந்தலைப் பெரும் போரிலே இவனைக் கிள்ளிவளவன் அழித்ததும், அதற்குக் கோதை மார்பன் என்பான் மகிழ்ந்ததும் ஆகிய செய்தி குறிக்கப்பெற்றுள்ளது.

பாணன் (325, 386)

இவன் கட்டியோடும் கூடி, உறந்தைத் தித்தன் வெளியனோடு மற்போர்க்குச் சென்று, அங்கே அவனுடைய