பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/271

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 259


நாளவையின் கிணையொலி கேட்டு அஞ்சி ஒடிப்போனவன். 'வடாஅது நல்வேற் பாணன் நன்னாடு' என்று மாமூலனார் குறிப்பதனால் (325), இவன் தமிழகத்துக்கு வடதிசைப் பகுதிக்கண் இருந்த பாணர் மரபினன் எனக் கருதலாம். இவனோடு ஆரியப் பொருநன் மற்போரிட்டுத் தோற்றழிந்த தனையும், அது கண்டு கணையன் என்பான் நாணி நின்றதனையும் பரணர் (386) குறிக்கின்றனர்.

பாரி (303)

பறம்பிற்கோமானாகவிளங்கிப்பாவலர் போற்றக் கொடை சிறந்து வாழ்ந்தவன் இவன். கபிலரின் நண்பன். மூவேந்தரால் முறையின்றி முற்றுகையிடப் பெற்று வீழ்ந்தவன். அவர்களின் முற்றுகைக் காலத்திலே, குருவியினம் கதிர்கொண்டு வந்து. ஊட்டிய செய்தியினைக் கூறுகின்றனர் ஒளவையார், ‘புலங்கந்தாக இரவலர் செலினே, வரைபுரை களிற்றொடு நன்கலன் ஈயும் உரைசால் வண்புகழ்ப் பாரி' என்று, பாரியின் புகழை ஒளவையார் உளங்கலந்து இச்செய்யுளுட் கூறுகின்றனர்.

புல்லி (311, 359, 393)


கள்வர் கோமான் எனவும், வேங்கடத்துக்கு உரியவன் எனவும் கூறப்பெறும் மாவீரன் இவன். 'வருவழி வம்பலர்ப் பேணிக், கோவலர் மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி, செவியடைதீரத் தேக்கிலைப் பகுக்கும் நன்னாடு இவனுடையது (31). "பொய்யா நல்லிசை மாவண் புல்லி (359) எனவும், 'குடவர் புழுக்கிய பொங்கவிழ்ப் புன்கம், மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும், நிரைபல குழிஇய நெடுமொழிப் புல்லி எனவும், மாமூலனார் இவனை இச்செய்யுட்களுள் (359, 393) போற்றுவர்.

பொறையன் (வென்வேற்) (338)

'பசும்பூண் பொறையன்' என்ற பகுதியிற் கூறப்பெற்றன காண்க. 'ஒன்னார் தேயம் பாழ்பட நூறும் துன்னரும் துப்பின் வென்வேற் பொறையன்' எனப்போற்றி, அகலிருங் கானத்துக் கொல்லி இவனுக்கு உரியது' எனவும் மதுரைக் கணக்காயனார் இச்செய்யுளுட் கூறுவர்.

மழவர் (309, 337)

மழவர்கள் சேலமாவட்டத்தின் தகடூர்ப் பகுதிகளை யொட்டி வாழ்ந்த மறவர் இனத்தவர் ஆவர். இவர்களுடைய கோமானாக அதியமான் அஞ்சி குறிக்கப் பெறுவான். இவர்கள் தெய்வஞ் சேர்ந்த பராஅறை வேம்பிற் கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப் புலவுப் புழுக்கு உண்ட செய்தியும் (309), தூதொய் பார்ப்பானின் மடியிடத்து வெள்ளோலையைப் பொன்னெனப் பிழைபடக் கருதி அவனை அம்பேவிக் கொன்று, அவனுடைய