பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அகநானூறு - நித்திலக் கோவை


(களவிற்கூடி மகிழ்ந்துவந்த காதலர்கள், தினையறுவடைக்குப் பின், தலைவி இற்செறிக்கப்பட்டனளாக, இரவுக் குறியிலே இன்புற்று வருகின்றனர். இரவுக் குறியினால் வரும் ஏதங்கள் பலவற்றையும் கருதிய தோழி, விரைவிலே மணஞ்செய்து கொள்வதற்குத் தலைவனைத் தூண்டி, அதனை நிகழ்வித்து விடவும் விரும்புகின்றாள். அதனால், அவனைப் பகலில் வருக’ என்று கூறி, அதுவும் இயலாதாதலை உணர்த்தித் தன் கருத்தைப் புலப்படச் செய்கின்றாள்.)

          உழுவையொ டுழந்த உயங்குநடை ஒருத்தல்
          நெடுவகிர் விழுப்புண் கழாஅக கங்குல்
          ஆலி அழிதுளி பொழிந்த வைகறை
          வால்வெள் அருவிப் புனல்மலிந் தொழுகலின்
          இலங்குமலை புதைய வெண்மழை கவைஇக் 5

          கலஞ்சுடு புகையிற் றோன்றும் நாட!
          இரவின் வருதல் எவனோ? பகல்வரின்
          தொலையா வேலின் வண்மகிழ் எந்தை
          களிறனந் தெய்தாக் கன்முகை இதனத்துச்
          சிறுதினைப் படுகிளி எம்மொடு ஒப்பி 1O

          மல்ல லறைய மலிர்சுனைக் குவளை
          தேம்பாய் ஒண்பூ நறும்பல அடைச்சிய
          காவலர்க் கரந்து கடிபுனம் துழைஇய
          கூந்தல் மெல்லணைத் துஞ்சிப் பொழுதுபடக்
          பெருங்களிற்று ஒருத்தலின் பெயர்குவை 15

          கருங்கோற் குறிஞ்சிதும் உறைவி னுர்க்கே.

புலியோடு போரிட்டுப் புண்பட்டுத் தளர்ந்த நடையுடைய தாகிச் செல்லும் களிற்றினது, நீண்ட பிளப்பாகிய விழுப் புண்ணினைக் கழுவுவதாக, இரவிலே, பனிக்கட்டியோடுங் கூடியதான மிக்க துளிகளையுடைய மழையினையும் வானம் பொழிந்தது. அதனாலே, வைகறைப் போதிலே, மிக்க வெண்மையினையுடைய அருவிகள் புனல் மிகுந்தவையாக வீழ்வனவாய் விளங்கும் மலையும் புதைப்பட்டுத் தோன்றுமாறு வெண் மேகங்கள் சூழ்ந்து கொண்டன. அக்காட்சி மட்கலன் சுடுகின்ற சூளையினிடத்தே இருந்து எழுகின்ற புகையினைப் போலத் தோன்றுகின்ற, மலைநாட்டானே! இப்படிப்பட்ட மழைக்காலத்து இரவில் நீ வருவதுதான் ஏனோ?

தொலைதலில்லாத வேற்போரிலே, வளவிய மகிழ்ச்சியினை அடைகின்ற தன்மையுடையவன் எம்முடைய தகப்பனாவான். அவன், களிறு கையுயர்த்தும் அடைதற்கியலாத,