பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 25



          உப்பொய் உமணர் ஒழுகையொடு வந்த
          இளைப்படு பேடை இரியக் குரைத்தெழுந்து 15

          உருமிசைப் புணரி யுடைதரும்
          பெருநீர் வேலிஎம் சிறுநல் ஊரே.

விரையச் செல்லுகின்ற நின் தேரினை நின் ஏவலாளருடனே விட்டுவிட்டுத் தனியனாக இவண் வந்துநின்ற பெருந்தகையாளனே! நீ நல்ல ஒழுக்கத்தினை உடையை! அன்றியும், கண்டவர் தொழுது போற்றக் கருதும் உடலழகுபெற்றவனும் நீ ஆவாய்! நீ, மனச்சிதைவை முற்படப்பெற்றவனாகப் பல நாளும் வந்து பணிவான சொற்களையும் பேசுகின்றனை! அதனாற் குவளை மலர்போலும் மையுண்ட தன் கண்கள் கலங்க, இவளும் நின்னிடத்தே பெரிதும் மயக்கங் கொண்டவளாயினாள்.

மனமறிந்து பேணும் தாயினைக் கொண்டிருக்கும் பெரிய மனையிலே, சுற்றத்தவர் அனைவரும் பாராட்டுமாறு, அன்பின் பெருக்கிலே வளர்ந்த அழகியாள் இவள். அதனாலே, சிறிதளவு பெரிதான மடத்தினையும் இவள் கொண்டிருப்பவள் ஆவாள்!

அதனால், குன்றுபோலத் தோன்றும் திரண்ட மணல் மேட்டினையுடைய கடற்கரை நாடனே!

இன்று, இவளை இவ்விடத்தேயே அடைய விரும்பாது நீயும் சென்று வருவாயாக. பூக்கள் விரிந்துகிடக்கத் தோன்றும் புன்னைக்கு மேலாகக் காணப்படும் அப் பனைமரத்தருகே சென்றால், அதனின்றும் கூப்பிடு தூரத்தில் உள்ளதே எங்கள் ஊராகும்.

உப்பு விலைகூறி விற்கும் உமணரது வண்டியோடுவந்த, ஈன்று காவற்பட்ட பேடையானது அஞ்சும்படியாக எழுந்த இடிமுழக்கம்போல, ஒலிசெய்து வரும் அலைகள் உடைந்து சிதறுகின்ற கடற்கரையின் எல்லையிலே உள்ளதே எம்முடைய நல்ல சிற்றுாராகும்!

சொற்பொருள் : 1. கடுந்தேர் - கடிதாகச் செல்லுதலை யுடைய தேர். 2. இளையர் - பணியாளர். 3. அழிவு - நெஞ்சழிவு. 4. பணிமொழி - பணிவான பேச்சு 6 பேது - மயக்கம். 7. நகர் - மனை.8.மாதர்-பெண்.9, மடம்-மடமை; கொளுத்தக் கொண்டு - கொண்டது விடாத தன்மை.10. குலவு மணல் - திரண்ட மணல், 13.தெய்ய அசை, உப்புஒய்-உப்பு விலைகூறும் ஒழுகை வண்டி 15. இளைப்படல் ஈன்று காவற்படல். குரைத்து - ஒலித்து 17. பெருநீர் - கடல்.