பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 27




தோழி! பேய்கள் நடமாடிக் கொண்டிருக்கின்ற் நள்ளிரவு வேளையிலே, அரிதான காவலைக் கொண்ட மதில்சூழ்ந்த நம் அகன்ற மனையிடத்தின் ஒரு பக்கத்தே, பெரிய பெண் யானையைப் பரிசில்பெற விரும்பிவந்து, மனைக்கடையிற் செவ்வி பார்த்துக் காத்து நிற்கின்ற பரிசிலரைப் போன்ற ஆர்வமுடனே, அவரும் காத்து நின்றனர். காவலர்கள் சோர்ந்து அயர்ந்தனராக, எழுதினாற் போன்று அழகியதாக விளங்குவதும், திண்ணிய நிலையினை யுடையதுமாகிய கதவினைத் திறந்துகொண்டு, நம் மனையுள்ளும் அவர் வந்தனர். நம்மைக் கூடி, "நம்மினும் சிறந்த காதலர் இவ்வுலகத்து எவருமில்லை’ என்றும் கூறினர். பொலிவுபெற்ற நம் கூந்தலை நீவியபடியே, காதலோடு இவ்வாறு நம்மைக்கூடி அவர் சென்றது பலநாட்களாகும்.

மழையாகிய பயன்கெட்டுத் திசைகளெல்லாம் கொதிப் படையவும், புதியரான வழிப்போக்கர் வருங்கால் அவர்களைப் பேணுபவராக, இளைய எருதுகளின் கழுத்திற் கட்டியிருக்கும் மூங்கிற் குழாயினிடத்தேயுள்ள இனிதான புளிச்சோற்றினை, அப்புதியரின் பசியினாலேயுண்டான காதடைப்புத் தீரும் படியாகத் தேக்கிலையிலே வைத்துப் பகிர்ந்து அளிக்கின்ற கோவலர்களையுடையது, புல்லி என்பான் காத்து வரும் நல்ல தன்மையினையுடைய வேங்கட நன்னாடு. அதற்கும் அப்பாலுள்ள, செல்லுதற்கும் அரிதான சுரநெறியைக் கடந்து அவர் சென்றிருப்பினும், நம்மீது அருள் கொண்ட சொற்களினாலே நம்மைத் தெளிவித்து அந்நாளிலே நம்மைப் பிரிந்து சென்றவரான அவர், பிரிந்துறையுங் காலத்தினை நீட்டிக்கமாட்டார் என்று அறிவாயாக.

சொற்பொருள் : 1. இரும்பிடி - பெரிய பெண்யானை, கரிய பெண் யானையும் ஆம். 2. கடை - வாயிற்கடை காப்பின் மதிற்கவரினையுடைய அகனகர் - அகற்சியினையுடைய பெரிய மனை 3, எழுதியன்ன - எழுதிப் புனைந்தாற் போன்று அழகிய, திண்மை செறிவுடைமை.4 கழுது பேய். அரை நாள், நள்ளிரவு வேளை, 7. பொம்மல் ஒதி - பொலிவினையுடைய மகளிரின் கூந்தல் நீவி - தடவிவிட்டு, 8. பயம் - மழைப்பயன். தலைப் பெயர்தல் - நிலைமாறிப் போதல், 9. வம்பலர் - புதியரான வழிச்செல்வார். 10. மழவிடை - இளைய எருது. 1. செவியடை - காதடைப்பு: இது பசியினாலே வந்துறுவது.12 புல்லி நன்னாடு - கள்வர் கோமான் புல்லிக்கு உரியதான வேங்கட நன்னாடு. 14. தேற்றி - தெளிவித்து.

விளக்கம் : தலைவன் தலைவியை அடைவதற்கான செவ்வியை எதிர்நோக்கி அவளுடைய மனையின் கடை