பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அகநானூறு - நித்திலக் கோவை



வாயிலிலே காத்துநின்ற நிலையினைப், பிடியானையினைப் பரிசிலாக அடையவிரும்பிக் காத்துநிற்கும் பரிசிலரின் நிலைக்கு ஒப்பிட்டுக் கூறினர் காவலர்க்கும் அஞ்சாது, அவளை இரவுக் குறியிற் கூடிய அவனது துணிவும், 'நம்மிற் சிறந்தோர் இம்மையுலகத்து இல் என, அவன் சொல்லிய சொற்களும், கூந்தலை நீவித் தலையளிசெய்த செயலும், பிறவும், அவனுடைய காதலின் மிகுதியை உணர்த்துவனவாம். அந்தக் காதலும் நிலையானது என்பார், இந்நிகழ்ச்சிகள் பன்னாள் நிகழ்ந்தவை என உரைக்கின்றனர். -

'இரும்பிடிப் பரிசிலர்போலக் கடை நின்று’ என்பதும், 'அருங்கடிக் காப்பின அகனகர்’ என்பதும், தலைவியின் குடும்பத் தகுதியினை உணர்த்துவன; அதனை அவன் அறிந்திருந்த நிலையினையும் காட்டுவன.

புதியராய பரிசிலர்க்கும் கோடையின் வழிநடை வருத்தம் தீர உபசரிக்கும் புல்லிநாட்டுக் கோவலரின் செயலைக் கூறினார்; அவருடைய அருளுடைமையைக் காணுகின்ற தலைவன், பன்னாட் பழகிய தன் காதலியைத் தான் துறந்து வருந்தவிட்டு வந்ததனை நினைந்து, தானும் அருளுள்ளம் கொள்வான் என்பதனால்,

இதனால், தலைவன் வரைவிடை வைத்துத் தலைவியைப் பிரிந்து சென்றவன் என்பதும் பெறப்படும். அவன், காலம் தாழ்க்காது திரும்புவான் என்ற உறுதியும் உணரப்படும்.

கோடையின் வெம்மையாலும், வழிநடைத் துயராலும், பசியினாலும் வருந்தும் வம்பலர்க்குப் புளியஞ் சோற்றினைத் தேக்கிலையிற் பகுத்தளிக்கும் கோவலர்போலத், தலைவியின் காமநோயும், அதனாலுற்ற துயரமும், உணவு வேண்டாமையும் அகலத் தலைவனும் வந்து தலையளி செய்வான்’ என்பது கருத்தாகும்.

312. ஆடலாம் வருக!

பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார். திணை : குறிஞ்சி. துறை : தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது; தலைமகள் சொல்லியதுமாம். சிறப்பு : வழுதியின் போராற்றல் பற்றிய செய்தி.

(கார்காலத்தின் தொடக்கத்தினைக் கண்ட தோழி, தலைவனின் இரவுக்குறி வருதலை நீக்கி, அவன் உள்ளத்தினை வரைந்துகோடலிற் செலுத்துபவளாக, இங்ஙனம் தலைவி யிடத்தே கூறுகின்றனள், இரவுக் குறியிடத்தே அவன் வந்து