பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 29


ஒருசிறை நிற்பதறிந்து, அவன் கேட்குமாறு கூறியதும் இது. தலைவியே தோழிபாற் கூறியதாகவும் கொள்ளலாம்)

          நெஞ்சுடன் படுதலின் ஒன்றுபுரிந் தடங்கி
          இரவின் வரூஉம் இடும்பை நீங்க
          வரையக் கருதும் ஆயின் பெரிதுவந்து
          ஓங்குவரை இழிதரும் வீங்குபெயல் நீத்தம்
          காந்தளஞ் சிறுகுடிக் கெளவை பேணாது 5

          அரிமதர் மழைக்கண் சிவப்ப நாளைப்
          பெருமலை நாடன் மார்புபுனை யாக
          ஆடுகம் வம்மோ - காதலம் தோழி!
          வேய்பயில் அடுக்கம் புதையக் கால்வீழ்த்து
          இன்னிசை முரசின் இரங்கி ஒன்னார் 10

          ஒடுபுறம் கண்ட தாள்தோய் தடக்கை
          வெல்போர் வழுதி செல்சமத் துயர்த்த
          ஆடுபுகழ் எஃகம் போலக்
          கொடிபட மின்னிப் பாயின்றால் மழையே!
          அன்பு மிகுந்தவளான தோழியே! 15

மூங்கில்கள் செறிந்திருக்கும் மலைச்சாரல்கள் அனைத்தும் மறையும்படியாகக் காலிரங்கியும், இனிதாக இசைத்தலைக் கொண்ட முரசத்தினைப்போல இடிமுழக்கியும் பகையாயினோர் களத்தினின்றும் புறமுதுகிட்டு ஓடிப்போகின்ற புறக்கொடையினைக் கொண்டவனும், முழந்தாளினைப் பொருந்துமாறு நீண்ட பெரிய கையினை உடையவனும், போரில் வெற்றிகொள்வோனும் ஆகிய பாண்டிய மன்னன், நிகழ்ந்து கொண்டிருக்கின்ற போரினிடத்தே உயர்ந்த, பகைவரைக் கொல்லும் புகழினையுடைய வேலினைப்போல ஒழுங்குபட மின்னிக் கொண்டும், அதோ மேகங்கள் பரவியிருக்கின்றன,

பெரிய மலைநாட்டினனாகிய நம் தலைவன், நம்முடனே தன் நெஞ்சம் ஒன்றுபட்டிருத்தலினாலே, நம்மை வரைந்து கொள்ளுதலாகிய அந்த ஒன்றினையே விரும்பி அமைந்தவனாகி, இரவு நேரத்திலே இங்ஙனம் வருகின்றதான வருத்த மெல்லாம் நீங்கிப்போமாறு, நம்மை வரைந்து கொள்ளுதலையும் எண்ணுபவன் ஆவான். ஆதலினாலே,

காந்தட்பூக்களை உடையதான நம் சிற்றுாரினிடத்தே, நம்மைப்பற்றி எழுந்த அலரினைப் பாராட்டாது, உயரமான மலைமுகட்டினின்று வீழுகின்ற பெருமழையினாலாகிய வெள்ளத்தினையுடைய அருவியிலே, நம் தலைவனாகிய அவனுடைய மார்பே தெப்பமாகக் கொண்டு, செவ்வரி பரந்து