பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 33



314. மன்னுக பெரும!

பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம் மள்ளனார். திணை: முல்லை. துறை: வினைமுற்றிப் புகுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.

(பிரிந்து சென்ற தன் தலைவனை நினைந்து வாடி நலிந்த தலைவி, அவனுடைய பாணனிடம், இந்நிலை வாராராயின் தன்னிலை எவன் கொல்?’ என்று கேட்டுத் துடிக்கின்றனள். அவ்வமயம், தலைமகன் தேரூர்ந்து வந்துசேரக் கண்ட தலைவியின் தோழி, அவனை வாழ்த்திக் கூறுவது இது. தலைவியின் இல்லிருந்து இரங்கிய நிலையினைக் குறித்தலால் முல்லையாயிற்று.)

          நீலத் தன்ன நீர்பொதி கருவின்
          மாவிசும் பதிர முழங்கி ஆலியின்
          நிலம்தண் ணென்று கானங் குழைப்ப
          இனந்தேர் உழவர் இன்குரல் இயம்ப
          மறியுடை மடப்பினை தழீஇப் புறவின் 5

          திரிமருப் பிரலை பைம்பயிர் உகள
          ஆர்பெயல் உதயிவ கார்செய் காலை
          நூனெறி நுணங்கிய கானவில் புரவிக்
          கல்லெனக் கறங்குமணி இயம்ப வல்லோன்
          வாய்ச்செல வணங்கிய தாப்பரி நெடுந்தேர் 10

          ஈர்ம்புறவு இயங்குவழி அறுப்பத் தீந்தொடைப்
          பையுள் நல்யாழ் செவ்வழி பிறப்ப
          இந்நிலை வாரார் ஆயின் தந்நிலை
          எவன்கொல்? பாண உரைத்திசிற் சிறிதெனக்
          கடவுட் கற்பின் மடவோள் கூறச் 15

          செய்வினை அழிந்த மையல் நெஞ்சில்
          துனிகொள் தனையால் வாழ்கநின் கண்ணி!
          வேலி சுற்றிய வால்வி முல்லைப்
          பெருந்தார் கமழும் விருந்தொலி கதுப்பின்
          இன்னகை இளையோள் கவவ 2O

          மன்னுக பெரும! நி மலர்ந்த மார்பே!

நீலமணியினைப் போன்றதாக நீராற் பொதிவுற்றுச் குலுடையது ஆகியும், பெரிதான வானமும் அதிரும்படியாக இடிமுழக்கத்தினைச் செய்தும் பெய்த நீரினால் மண்ணெல்லாம். குளிரவும், காட்டகமெல்லாம் தழைத்திடவும், தம்முடன் உழவுக்கு வருகிற இனத்தவரை ஆராய்வரான உழவர்கள் இனிய