பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அகநானூறு - நித்திலக் கோவை


குரலெடுத்து அழைக்கவும், குட்டியினையுடைய தன் இளைய பிணையினைத் தழுவியபடியாக, முறுக்குண்ட கொம்புகளையுடைய கலைமானானது காட்டில் மெல்லெனப் பயிர்தலுடனே துள்ளித் திரியவுமாக, மேகங்கள் மிகுதியான மழையினைப் பெய்து உதவிக் கார்ப்பருவத்தினைச் செய்யும் காலத்திலே-

“பாணனே! அசுவசாத்திர முறைப்படி நுட்பமான இலக்கணக் கூறுபாடுகள் எல்லாம் அமைந்ததும், வேகத்தாற் காற்றெனக் கூறத் தகுவதுமான குதிரைகள், கல்லென்று ஒலிக்கும் தம் மணிகள் முழக்கமிடத் தாவிச் செல்லுமாறு, தேர் செலுத்துதலில் வல்லோனாகிய பாகன், தாவும் செல வினையுடைய நெடிய தேரானது ஈரம் பொருந்திய செல்லும் வழியிடங்களை அறுத்துக்கொண்டு செல்லுமாறு செலுத்த, இனிதான நரம்புத் தொகுதியினையுடைய நல்ல யாழினிடத்தே வருத்தத்தைத் தரும் செவ்வழிப்பண் தோன்றுகின்ற இந்த மாலைப்பொழுதிலே, நம் தலைவரும்வந்து சேராராயின், அவரது, காதலின் தன்மைதான் யாதாகுமோ? சிறிதே உரைப்பாயாக” என்று, கடவுட் கற்பினையுடைய இளையோளாகிய நின் தலைவி சொல்லவும்-

பெருமானே! செய்யத்தகும் செயல்களின் நினைவும் அழிந்துபோக, மயக்கமுற்றுவிட்ட எம் நெஞ்சிடத்துத் துன்பங் கொள்ளுதலாகிய வருத்தமெல்லாம் தீர்ந்துபோகும் படியாக, நீயும் வந்து அடைந்தனை.

அதனால், எமக்கு இனிதான செயலினைச் செய்தனை யாவாய், நின் கண்ணி வாழ்வதாக நின்னுடைய அகன்ற மார்பு, மனைக்கு வேலியாகச் சூழ்ந்து கிடக்கும் முல்லையின் வெண்மையான மலர்களினாலேயாகிய பெரிதான மாலையானது மணந்து கொண்டிருக்கும், புதுமையுறத் தழைத்த கூந்தலையுடைய, இனிதான மகிழ்ச்சியினை உடையோளாகிய இளையவளான நின் காதலியானவள் தழுவிக்கொள்ள, இனி நிலை பெறுவதாகுக!”

சொற்பொருள்: 1. நீலம்-நீலமணி, நீலத்தன்ன நீலமணியின் ஒளியுடைய கருநிறத்தைப் போன்றதாக கருவின் சூலின். 2. மாவிசும்பு - பெரிதான வானம்; அமர்விசும்பு எனவும் பாடம். 3. குழைப்ப-தழைப்புற.4.இனம்-உழவரினம்.5.புறவில்-காட்டில். 6. பயிர்தல் அழைத்தல்: இரலை. ஆண்மான். 7. ஆர்பெயல் - மிக்க மழை. கார்பெயல் எனவும் பாடம். 8. கானவில் - புரவி வேகத்திற்குக் காற்றினை ஒப்பாகச் சொல்லக்கூடிய குதிரைகள். நூல் நெறி அசுவசாத்திர முறைமை, 9. வல்லோன் - தேர்