பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 57


களவும் கைம்மிக அலர்ந்தன்று அன்னையும்

உட்கொண் டோவாள் காக்கும் பிற்பெரிது
5

இவண்உறைபு எவனோ? அளியள்!' என்று அருவி
ஆடுநடைப் பொலிந்த புகற்சியின், நாடுகோள்
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை
வள்ளுயிர் மாக்கிணை கண்ணவிந் தாங்கு

மலைகவின் அழிந்த கனைகடற்று அருஞ்சுரம்
10

வெய்ய மன்றநின் வைஎயிறு உணிஇய
தண்மழை ஒருநாள் தலைஇய ஒண்ணுதல்
ஒல்கியல் அரிவை நின்னொடு செல்கம்!
சில்நாள் ஆன்றனை யாகஎனப் பன்னாள்

உலைவில் உள்ளமொடு வினைவலி உறீஇ
15

எல்லாம் பெரும்பிறி தாக வடாஅது
நல்வேற் பாணன் நல்நாட்டு உள்ளதை
வாட்கண் வானத்து என்றுழ் நீள்இடை
ஆட்கொல் யானை அதர்பார்த்து அல்கும்

சோலை அத்தம் மாலைப் போகி
2O

ஒழியச் சென்றோர் மன்ற
பழியெவன் ஆங்கொல் நோய்தரு பாலே?

தோழி! நீ வாழ்வாயாக யான் கூறுவதனைக் கேட்பாயாக!

"வெண்மையான மணல் உயரமாக விளங்கிக் கொண் டிருக்கும் அழகிய வாயிலையுடைய நம் பெரிய மனையினிடத்தே, இருள்செறிந்த இரவு நேரத்திலே, கூடுதற்கான குறியானது வாய்த்த களவொழுக்கமும் வரம்புகடந்து வளர்ந்ததாயிற்று. நம் அன்னையும் அதனைத் தன் உள்ளத்தே கருதிக்கொண்டவளாக, நம்மை நீங்காது காத்திருப்பாளாயினள். அதன் பின்னரும் , இவ்விடத்தே மிகுதியாகத் தங்கியிருப்பது யாங்ஙனம்? அதனால், இவள் இரங்கத்தக்கவள்” என்று நினைந்து நம்பால் அருள்கொண்டனர்.

“வெற்றி நடக்கையினாற் பொலிவுற்ற விருப்பத்தினாலே அள்ளனை நாட்டினைக் கொள்ளும்படியாகப் பணித்த அதியன் என்பானுக்குப் பின்னால், சிறந்த ஒலியினையுடைய பெரிய கிணைப்பறையின் ஒலியும் அடங்கிற்று. அதனைப்போல மலையும் அழகிழந்து போகிய, வெம்மை மிகுந்த காடாகிய பாலை நிலத்து வழிகள், ஒருதலையாக மிகவும் கொடுமை உடையவாயின. நின்னுடைய கூரிய பற்களிடையே உண்ணப்