பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அகநானூறு -நித்திலக் கோவை


படுவதற்கேற்றவாறு குளிர்ச்சியான மழையும்அவ்வழிகளில் ஒரு நாள் பெய்வதாகுக. ஒளிபொருந்திய நுதலினையும் தளரும் இயவினையும் உடையவளான அரிவையே! அப்போது, யாம் நின்னோடும் அவ்வழியாக எம்மூர் செல்வேம். அதுவரக் சிலநாட்கள் அமைந்திருப்பாயாக" என்றனர்.

பலகாலமும் உலைவில்லாத உள்ளத்துடனே வினையின் வலிமையினை வற்புறுத்தி உரைத்தவராக, அவர் சொன்ன அவையெல்லாம் பெரிதும் மாறுபட்டதாக இப்போது நம்மைப் பிரிந்தும் சென்றனர்.

வடபகுதியிலே நல்ல வேலினைக் கைக்கொண்ட பாணன் என்பானின் நன்மைவிளங்கும் நாட்டினிடத்தே உள்ளதான, ஒளியமைந்த வானத்தின் கண்ணதாகிய ஞாயிற்றினது வெம்மை மிக்கதான நீண்ட சுரத்தினிடையே, வழிச்செல்வோரைக் கொல்லும் தன்மையுடைய யானையானது, வழியினை நோக்கியபடியே ஒதுங்கியிருக்கும் சோலைகளையுடைய காட்டகத்தே, மாலைவேளையிற் செல்பவராக, நாம் இவ்விடத்தே தனித்திருப்ப, அவர் விட்டுச் சென்றனர்.

ஆதலின், நோயினைத் தருகின்ற பகுதியாகவுள்ள பழிதான் ஒருதலையாக எவ்வாறு அவர்பால் ஆகும்?

சொற்பொருள்: 2. நிவந்த - உயர்ந்த கடை வாயில் நகர் மனை. 3. நளியிரும் - கங்குல் செறிந்த இருளுடைய இரவு; இருளடர்ந்த இரவு. 7. புகற்சி - விருப்பம், 8. பின்றை - பின்னால், அதியனின் மறைவுக்குப்பின்னரும் ஆம்.9.வள்ளுயிர்மாக்கிணை - சிறந்த ஒலியுடைய பெரியதான கிணைப் பறை. 13. ஒல்கு இயல் - தளர்நடை கொள்ளும் அழகு. 14. ஆன்றல் - அமைந்திருத்தல். 15. வினைவலியுறீஇ - வினையை வலியுறுத்தியும் ஆம். 18. வாட்கண் வானம் - ஒளிகொண்ட இடத்ததான வானம். 19. அதர் - வழி. 20. அத்தம் - காடு.

விளக்கம்: "இருள்செறிந்த இரவிலே நம் பெருமனையிடத்தே வாய்த்த புணர்குறிக் களவு கைம்மிக வளர்ந்ததும், அன்னையின் காவலும் நினைந்து, அதன்பின் இங்குத் தங்குவது ஏனோ என்று நம் நிலைக்கு இரங்கியவர் அவர். அந்நாள், உடன்செலற்கு விரும்பாத நம்மைக் காட்டின் வெம்மையைக் காட்டி, மழை தொடங்கியதும் வந்து அழைத்தேகுவதாகவும் அதுவரை பொறுத்திருக்கவும் கூறினர். அந்தக் காலமும் வந்தது. ஆனால், அவரையோ வரக்காணேன்? ஆட்கொல்யானை அதர்பார்த்து அல்கும் சோலை அத்தம் மாலைப்போகி ஒழியச் சென்றோர் அவர், அங்ஙனமாக, நமக்கு நோய்தரும் பகுதியாகப்