பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அகநானூறு - நித்திலக் கோவை


தோள்களை உட்ையவள்; சிறுத்த நெற்றியினையுடையவள்; இங்ஙனமாகிய நலமெல்லாம் பெற்றவள், இளமைச் செவ்வியினையுடைய நின் பரத்தையாவாள், அதனால்

வெற்றிச் சிறப்புடைய வேலினையும், அணிபல அணிந்து ஒப்பனை செய்ததாகி விளங்கும் பட்டத்து யானையினையும் உடையவன் சோழமன்னன்; அவனுடைய படைத்தலைவன் பழையன் என்பவன்; அவன், ஒடக்கோலும் அளந்து ஆழங் கண்டறியாத வெள்ளப் பெருக்கையுடைய காவிரிக்கரையின் தோட்டங்களையும், நீர் வழிந்தோடும் மதகுகளையும் உடைய ‘போர்’ என்னும் ஊருக்குரிய தலைவன்; அவன், களத்திலே தனக்கு எதிர்வருவார்மேல் எறிந்த வேலினைப்போல, அவள் நோக்கியவரிடத்தும், அவள் கண்கள் சென்று தைத்தலில் என்றும் தவறுவதேயில்லை.

செல்வம் உடையாரது விரைந்து செல்லும் தேர்கள் குழித்த தெருக்களிடத்தே, நெடிதாகக் கொடிகள் பரந்து கொண்டிருக்கின்ற அட்டவாயில் என்னும் ஊரிடத்தேயுள்ள, பெரிய கதிர்களையுடைய வயல்களின் பெரிதான அழகினைப்போன்ற அவளுடைய நலத்தினைப் பாராட்டி, நின் நடையிலே அழகு தோன்றும்படியாக, புதுநீர் விழாவில் அவளுடன் செல்லு தலையே நீயும் விரும்புபவன் ஆவாய்! (அதனால், எம் தலைவியின் கூட்டம் நினக்கு இனி வேண்டாதது என்றனளாம்)

சொற்பொருள்: 1. ஊரல் - ஊர்ந்து படர்தல், அவ்வாய் - அழகு வாய்ந்த உருத்த உருப்பெற்ற நிறமுடைய எனினும் ஆம் 3. குறுமகள் - இளையோள்; பருவத்தால் கவர்ச்சி கொண்டவள். 4. ஞெள்ளல் தெரு. 5. அட்டவாயில் - ஓர் ஊர். 8. விழவில் நீர்விழவில் 10. படப்பை தோட்டம் 11. புதவு - மதகு.

விளக்கம்: பரத்தையிடமிருந்து வருபவன் தலைவன். அவனைக் குறைகூறாமல், அந்தப் பரத்தையின் அழகு நலத்தையும், அவள் கண்ணோக்கத்தின் கொடுமையையும் கூறி, அதனால் தளர்வுற்றுத் தோற்ற நீ, இனியும் அவள் உறவினை மறந்துவிடுவாயல்லை: அவளுடன் புதுநீர்விழவிற் காவிரி யாடலையே விரும்புவாய்; ஆதலின் அவள்பாலே செல்க எனக் கூறுகின்ற திறத்தினை அறிந்து இன்புறுக மேனி வண்ணத்தின் சிறப்பினைப் பொன்வண்ணம் என்பவர், 'பெரிதான கதிர்களையுடைய கழனியின் பேரழகினைப் போன்றது’ என்றனர்.

இதனால், அத்தகைய அழகும், நின்னை எம்பால் அடிமை கொள்ளும் கண்நோக்கின் வலிமையும் இல்லாதவர் யாம்;