பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அகநானூறு - நித்திலக் கோவை




          பைந்நிணங் கவரும் படுபிணக் கவலைச்
          சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர்
          கோல்கழிபு இரங்கும் அதர
          பேய்பயில் அழுவம் இறந்த பின்னே.

துணிவு என்பதொன்று இல்லாத நெஞ்சமே!

இன்பமும் துன்பமும், புணர்தலும் பிரிதலும், நன்மையுடைத்தான பகற் காலத்தையும் இரவுக் காலத்தையும் போல வேறுவேறான தன்மையுடையன. அங்ஙனமாகி, அவை இல்வாழ்விற்கு மாறாக எதிர்ப்பட்டு விளங்குவன என்பதனை நீதான் உணர்ந்தனையோ? உணர்ந்தனையாயின், இவளைப் பிரிந்து, இன்னாமையினை உடைய வெம்மைகொண்ட சுரநெறியிற் செல்லுதலிலே நல்ல பொருள்வேட்கை செலுத்த, நீ அவ்வாறே சென்று அடைதலும் நினக்குப் பொருந்துவ தாகுமோ? அங்ஙனம், நீ செல்வதற்கே துணிந்து விட்டனை யாயின்

மிக்க வெம்மையுடைய ஞாயிற்றின் கிரணங்களாலே எழுகின்ற ஆவிபாய அவற்றின் அலைகளை, நீர் என்று கருதி விருப்புற்று, விலங்கினம் மிகுதியும் ஓடியலைந்து கொண்டிருக்கும், மரற்செடியும் வாடிகிடக்கும், அகன்ற இடத்தினையுடையதும், களர் பரந்துகிடக்கும் இடமகன்ற பரப்பினையும், செங்குத்தான மலைமுகட்டினின்றும் கொழித்துவரும் அருவி நீரினைப்போலப் பாம்பின் அழகிய வரிகளையுடைய தோல்கள் கிடந்து அசைந்து கொண்டிருக்கும் பாறைகளை உடையதும், அடிமரத்தே புற்றுக்கள் கட்டியிருக்கப் பெற்றிருத்தலைக் கொண்டதும் காய்ந்த கிளைகளை உடையதுமான மரத்தினிடத்தே, இருட்டின் நிறத்தைப் போன்ற உருவத்தினையும் நீலமணி போன்ற கண்களையும் உடைய காக்கையானது, பசிய நிணத்தினைக் கவர்ந்து உண்ணுகின்ற, பிணங்கள் மிகுதியாக வீழ்ந்துகிடக்கும் கவர்த்த நெறிகளை உடையதும், அவ்வழிச் சென்றோரின் பின்புறத்திலிருந்து இரக்க மிலராய் அவரைக் கொன்ற ஆறலை கள்வர்கள் தம் அம்புகள் வீணே கழிந்ததற்கு வருந்திக்கொண்டிருக்கும் நெறிகளை உடையதும், மூங்கில் அடர்ந்திருப்பதுமான காட்டினைக் கடந்தபின், எங்களைப்பற்றி எவ்வகையானும் நினைதலையும் செய்வாயோ?

சொற்பொருள்: 4, ஒருஉம் - பிரியும் 5. நன்னசை - நன்மை விளைப்பதாகிய பொருள் வேட்கை. 6. துன்னல் - சென்று சேர்தல். 7. வலித்தல் - துணிதல், 8. கனைகதிர் ஆவி அவ்வரி கோடையிலே தோன்றும் கானல், பேய்த்தேர் எனவும்