பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 65


7. நண்பு - உறவு முனிதல் - வெறுத்தல் 8. தெற்று - தெளிவு. 9. படர் - துன்பம். 10 உயங்க வருந்த 12. மழை - மேகம் கடுஞ்சூல் முதற்குல். 13. கழை மூங்கில் 15. சாயல் மார்பு; அழகிய மார்பு மென்மையுடைய மார்பும் ஆம்

விளக்கம்: அவரது துணிகண் அகல அளைஇ, எம் முலையிடை முயங்கிக்கூடிய அவர், இந்நாள் வளைநெகிழப் படர் அலைப்ப யாம் வாடுதலை நீக்க வாராராயினரே' என்றுரைக்கும் ஆற்றாமையினை அறிக 'முகந்துகொண்டு அடக்குவோம்’ என்றதனால், பிரியாத இன்பச் செவ்வியான மணந்து மனையறம் கொள்ளுதலை விரும்பிய அவள் உள்ளக் கிடக்கை யினையும் உணர்க.

உள்ளுறை: மடப்பிடி மழைதவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று, கழைதின் யாக்கை விழைகளி தைவர, வாழையம் சிலம்பில் துஞ்சும் என்று சொல்லியதனை நினைக்க அவ்வாறே, தானும் அவனை மணந்து கூடியிருத்தலையும், தங்கட்கு ஒரு மகனைப் பெறுதலையும், அப்போது தலைவன் தன் அருகிருந்து அன்பு பாராட்டுதலையும், அவள் உள்ளம் எதிர் நோக்கியதனை அது உணர்த்துவதனையும் அறிந்து இன்புறுக.

மேற்கோள்: 'முகந்து கொண்டு அடக்குவம்’ என, 'இடைவிடாது இன்பம் நுகர விரும்பியவாறும், உள்ளுறையான் இல்லறம் நிகழ்த்த விரும்பியவாறும் காண்க' என, 'ஒருதலை உரிமை வேண்டியும்’ என்னுஞ் சூத்திர உரையில், நச்சினார்க்கினியர் காட்டிக் கூறுவர்.

329. வாழ்தல் வல்லரோ?

பாடியவர்: உறையூர் முதுகூத்தனார்; முதுகூற்றனார் எனவும் பாடம். திணை: பாலை. துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது: பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது உம் ஆம்.

(தன்னைப் பிரிந்துசென்ற தலைவனின் செயலை நினைந்து, அந்தப் பிரிவுத் துயரினாலே வாடியிருக்கும் தலைவியானவள், தன் தோழியிடத்தே, இவ்வாறு தன் ஆற்றாமையினை உரைக்கின்றாள். அல்லது-

தலைவன் பிரிந்து செல்ல எண்ணிய செய்தியைத் தோழி தலைவியிடத்தே சொல்ல, அப் பிரிவைப் பொறுக்கவியலாத தன் நிலைமை தோன்றத் தலைவி தோழியிடத்திற் கூறியதும்ஆம்)