பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 67


துன்பம்-பிரிவான் வந்தடைவது.4.குரம்பை- குடிசை.5.படுமணி - பொருந்திய மணி, பொருந்துதல், பகடுகளின் கழுத்திடத்தே. 6. ஒழுகை - வரிசையாகச் செல்லும் வண்டிகள் 10. வெரிந் முதுகு. வரி - வரிகளையுடைய புலியைக் குறித்தது. 12. உரறும் முழக்கமிடும்; மைதுங்கும் இருள்- கவிந்திருக்கும்.இறும்பு-காடு

விளக்கம்: பூங்கணும் நுதலும் பசப்ப நோய் கூர்ந்து தான் வருந்தும் நிலைக்கு ஒப்பவே, சிறுவரிக் குருளை யானை நீர்நசைக்கு இட்ட கை கறித்து உரலும் மைதுங்கு இறும்பில் சுனை, புலி புக்கு ஈனும் வறுஞ்சுனைய்ாயின தன்மையினையும் கூறினாள்.

புலி புக்கு ஈனும் வறுஞ்சுனையும், ஒழுகைப்பகடு அயாக் கொள்ளும் வெம்முனைத் துகள் தொகுத்து எறிவளி சுழற்றும் என்பதும் கூறினார். காடு கடத்தற்கு அரிதான கொடுமையினையுடையது என்பதனைக் காட்டுதற்கு

புலியின் கொடுந்தன்மையை. அதன் சிறு குட்டிகூட நெடுதல் யானை நீர் நசைக்கு இட்ட கையினைக் கடித்து முழங்கு மென்பதனால் தெளியவைத்தனர்.

இதனால், 'எனக்குத் துன்பமாயது, அவர்க்கும் துயரமானது, இத்தகைய பிரிவினை அவரேன் மேற்கொண்டனர்? என வருந்தினள் என்க.

330. நிறையில் நெஞ்சம்!

பாடியவர்: உலோச்சனார். திணை: நெய்தல். துறை: தலை மகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட்குக் குறைநயப்பக் கூறியது.

(நெய்தல் நிலப்பகுதியிலே ஒரு தலைவனும் தலைவியும் நாள் தவறாமல் சந்தித்து வருகின்றனர். அப்போது, யாது காரணத்தாலோ தலைவிக்கு அவனுக்கு இசைவதற்கு விருப்பம் இல்லை. தலைவன் தவறாது வரினும், தன்காதலியின் அணைப் பினைப் பெறத் துடிப்பினும் பயன் யாதுமின்று. அந்நிலையில் அவன் தலைவியின் தோழியும், தங்கள் உறவுக்குத் துணை நின்றவளுமான நங்கையின் உதவியினை நாடுகின்றான். அவனுக்காக இரக்கப்பட்ட அவளும், தலைவிபாற் சென்று அவனுடைய கவலையினைத் தீர்க்கும் எண்ணத்துடனே இங்ங்ணம் கூறுகின்றாள். இதனால், தலைவியின் உள்ளத்தே நிலவும் காதலை எழுப்பி,அவளை, அவனுடைய குறையைத் தீர்க்கத் தூண்டினாளும் ஆம்)