பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

அகநானூறு - நித்திலக் கோவை



('என்றும் பிரியேன்” என்று, தன்பாற்கூறித் தன்னைத் தெளிவித்துக் கூடிய காதலன் பிரிந்துபோயின காலத்திலே, அவனுடைய பிரிவினால் வந்துற்ற துயரத்தினைப் பொறுக்க மாட்டாது போயின தலைவி, தலைவன் தன்மீது அன்பற்றவ னாயினான்’ எனக் கூறி வருந்துகின்றதாக அமைந்தது இச் செய்யுள்)

நீடுநிலை அரைய செங்குழை இருப்பைக்
கோடுகடைந் தன்ன கொள்ளை வான்பூ
ஆபரந் தன்னி ஈனல் எண்கின்
சேடுசினை உரீஇ உண்ட மிச்சில்
பைங்குழைத் தழையர் பழையர் மகளிர் 5

கண்திரள் நீள்அமைக் கடிப்பிற் றொகுத்து
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்
சீறுர் நாடு பலபிறக் கொழியச்
சென்றோர் அன்பிலர் - தோழி! என்றும்
அருந்துறை முற்றிய கருங்கோட்டுச் சீறியாழ்ப் 10

பாணர் ஆப்பப் பல்கலம் உதவி
நாளவை இருந்த நனைமகிழ் திதியன்
வேளிரோடு பொரீஇ கழித்த
வாள்வாய் அன்ன வறுஞ்சுரம் இறந்தே!

தோழி!

நீண்டநிலையாகிய அடிமரத்தினையும் சிவந்ததளிர் களையும் கொண்டன இருப்பை மரங்கள். அவற்றிலே யானைத் தந்தங்களிற் கடைந்து அமைத்தாற்போன்ற வெள்ளிய பூக்கள் விளங்கும். ஆடுகள் பரவியிருந்தாற்போலப் பரவி நின்ற குட்டிகளை யீன்ற பெண்கரடிகளின் கூட்டமானது, கிளைகளினின்றும் உதிர்த்து அப்பூக்களை உண்ணும். அவை உண்டதுபோக எஞ்சிக் கிடப்பவற்றைப் பசுமையான தழையுடையினை அணிந்தவரான எயினரின் மகளிர், கணுக்கள் திரட்சியுற்று நீண்ட மூங்கிற்குழல்களிலே தொகுப்பார்கள். தொகுத்தவற்றைக் குன்றிடத்தவாய சிற்றுார்த் தெருக்கள் தோறும் சுற்றி விற்றுத்திரிவார். அத்தகைய அழகிய குடியிருப்பினை யுடையவான சிற்றுர்களைக் கொண்டிருக்கும் மலைநாடு பலவும் பிற்பட்டுக் கழிய, அவர் சென்றனர்.

அரிதான இசைத் துறைகளிலே முதிர்ச்சியும், கரிய தண்டினைக்கொண்ட சிறிய யாழினையுமுடையவர் பாணர். அவர்கள் என்றும் ஆரவாரித்துக் கொண்டிருக்குமாறு அவர் கட்குப் பல அணிகலன்களையும் அளித்தவனாக, நாளோலக்-