பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அகநானூறு -நித்திலக் கோவை


333. நின்வாய் இன்மொழி!

பாடியவர்: கல்லாடனார். திணை: பாலை. துறை: பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

(தலைவனைப் பிரிந்திருக்கிறாள் தலைவி ஒருத்தி. குறித்த காலம் வந்தும், அவனை வரக்காணாத அவளுடைய வாட்டம் மிகுதியாகிறது. அவளுடைய துயரினைத் தீர்ப்பாளாக, அவளுடைய தோழி, அவன் விரைவில் வருவான்’ எனக் கூறி அவளைத் தெளிவிக்க முயலுகின்றனள். அப்போது, தலைவி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)

யாஅ ஒண்தளிர் அரக்குவிதிர்த் தன்னநின்
ஆக மேனி அம்பசப்பு ஊர
அழிவுபெரிது உடையை யாகி அவர்வயின்
பழிதலைத் தருதல் வேண்டுதி மொழிகொண்டு

தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்குநின்
5

எவ்வம் பெருமை உரைப்பின் செய்பொருள்
வயங்காது ஆயினும் பயம்கெடத் தூக்கி
நீடலர் - வாழி, தோழி! கோடையிற்
குருத்திறுபு உக்க வருத்தம் சொலாது

தூம்புடைத் துய்த்தலைக் கூம்புபு திரங்கிய
1O

வேனில் வெளிற்றுப்பனை போலக் கையெடுத்து
யானைப் பெருநிரை வானம் பயிரும்
மலைச்சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து
நாள்இடைப் படாமை வருவர் நமர்எனப்

பயம்தரு கொள்கையின் நயம்தலை திரியாது
15

நின்வாய் இன்மொழி நன்வா யாக
வருவர் ஆயினோ நன்றே வாராது
அவணவர் காதலர் ஆயினும் இவண்நம்
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல

சென்ற தேஎத்துச் செய்வினை முற்றி
20


மறுதரல் உள்ளத்தர் எனினும்
குறுகுபெரு நசையொடு தூதுவரப் பெறினே.

தோழி! நீ வாழ்க!

'யா மரத்தினது ஒளியுடைய தளிரிலே அரக்குப் பொடியினைத் தூவினாற்போல, நின் மேனியிடத்தே அழகிய பசலைபரக்க, வருத்தம் பெரிதாக உடையவளாகி, நின் காதலரான அவர்மாட்டுப் பழிச்சொற்களைக் கொண்டு