பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 77


பெயல்தொடங் கின்றால் வானம் வானின்

வயங்குசிறை அன்னத்து நிரையறை கடுப்ப
1O


நால்குடன் பூண்ட கால்நவில் புரவிக்
கொடிஞ்சி நெடுந்தேர் கடும்பரி தவிராது
இனமயில் அகவும் கார்கொள் வியன்புனத்து
நோன்குட்டு ஆழி ஈர்நிலம் துமிப்ப

ஈண்டே காணக் கடவுமதி பூங்கேழ்ப்
15


பொலிவன அமர்த்த உண்கண்
ஒலிபல் கூந்தல் ஆய்சிறு நுதலே!

பாகனே! மேகங்கள் ஒலிமுழங்கும் கடலிடத்தே நீரினை முகந்து எழுந்ததான ஆரவாரத்துடனே, கருமையான பிடியானைகளின் கூட்டத்தைப் போன்று சேர்ந்து, வானில் திரண்டுள்ளன. பெரிய களிற்றின் பருத்த கையினைப்போலப் பெயலும் காலூன்றிவிட்டது. வளைந்த முன்னங்கையினை உடைய மகளிர் விருப்பமுடன் விளையாடுகின்ற கழங்கினைப் போன்று விளங்கும் பனிக்கட்டிகளோடு, விரையத் துளிகளைச் சிதறி, மழை பெய்வதனையும் தொடங்கிவிட்டது.

புறங்கொடுத்து ஓடாது, எதிரேற்று வெற்றிகொள்ளும் நல்ல வீரமிக்க கொல்லேற்றினது தோலினாலே போர்க்கப் பெற்ற, வெற்றிகொள்ளும் முரசமானது, 'இழும்' என்னும் ஒலியுடன் முழக்கம் செய்யப் பகைவர் நாட்டின் திறைப் பொருளையும் நாம் கைக்கொண்டனம். ஆயின்-

வானத்தினிடத்தே விளங்கும் சிறகினையுடைய அன்னங்கள் வரிசையாகப் பறந்துசெல்லுதலைப் போலக் காற்றைப்போற் செல்வது எனக் கூறப்பெறும் வேகத்தையுடைய, நான்கு குதிரைகளை ஒருங்கே பூட்டிய கொடுஞ்சியயுடைய நெடிய நம் தேரானது, செல்லும் விரைவு மிகுதியைக் கைவிடாது, கூட்டமான மயில்கள் அகவிக்கொண்டிருக்கும் கார்காலத்துக் கவினைக்கொண்ட பரந்த முல்லைநிலத்தே, வலிமையான வட்டையினையுடைய உருள்களை ஈரமான நிலத்தினைக் கிழித்துச் செல்லுமாறு-

அழகிய நிறத்தாற் பொலிவுற்றனவாய் அமர்த்த மையுண்ட கண்களையும், தழைத்த பலவாகிய கூந்தலையும், அழகிய சிறுத்த நெற்றியினையும் உடைய தம் தலைவியைச் சென்று காணும்பொருட்டாக

இப்போதே நின் தேரினைச் செலுத்துவாயாக!