பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அகநானூறு -நித்திலக் கோவை


சொற்பொருள்: 1. ஒடா - புறமுதுகிட்டு ஓடாத வெற்றியினையுடைய நல்லேறு - நல்ல வன்மையுடைய கொல்லேறு. உரிவை - தோல், தைஇய - போர்த்த 2 ஆடுகொள் - வெற்றி கொண்ட 3 நாடு - பகைவர் நாடு; திறைகொண்டன மாயின் - திறைப்பொருளைக் கைக்கொண்டனமாயின். 4. சும்மை - பேரொலி, 6. தொழுதி - கூட்டம் 7 வணங்கு இறை - வளைவான முன்னங்கை அயர்ந்தனர் விருப்பம் உடையவராக; அமர்ந்தனர் எனவும் பாடம், 8.கதழ் உறை-விரைவான நீர்த்துளிகள் 9. பெயல் - மழை பொழிதல், 10 வயங்கு - விளங்கும். நிறை பறை - வரிசையாகப் பறத்தலையுடைய 11. நால்கு - நான்கு; பெயர்த் திரிசொல். கால் நவில் வேகத்தால் காற்றினைப் போன்றது எனச் சொல்லப் படும். தவிராது - தளராது. 14 நோன் சூட்டு ஆழி - வலிமையான வட்டையினையுடைய தேர்ச் சக்கரங்கள் 15. கடவுமதி - செலுத்துவாயாக. பூங்கேழ் - அழகிய நிறத்தினைக் கொண்ட 16. அமர்த்த - மாறுபட்ட, 17 ஒலித்தல் - தழைத்தல்.

விளக்கம்: 'நாடு திறை கொண்டனமாயின்’ என்றதனால் தலைவன் அரசர் குடியினன் ஆகவோ, படைத்தலைவனாகவோ விளங்கியவன் என்க. அன்னத்து நிரைபறை என்றமையால், நான்கும் வெண்ணிறப் புரவிகளாதலும் பெறப்படும். இதனாற் பண்டை நாளில் தேர்கள் நான்கு குதிரைகள் பூட்டியும் செலுத்தப்பெற்றன என்பதனையும் அறியலாம். நாடு திறை கொண்டனமாயின்' என்னில், பகைவர் நாட்டையே திறையாகக் கைப்பற்றிக் கொண்டனமாயின்’ எனவும், 'பகைவர் நாட்டிடத்துத் திறையினைப் பெற்றனமாயின் எனவும் பொருள் கொள்ளலாம்.

விரைந்து செல்லலை விரும்புகின்ற தலைவனின் உள்ளம், குதிரைகளைப் பற்றிய குறிப்பானும், தேருருள் நிலத்தைக் கிழித்துச் செல்லச் செலுத்துக என்பதனாலும் பெறப்படும். சிறுநுதல் சிறுத்த நுதலினளான தலைவியைக் குறித்ததாம்.

335. உடன்கொண்டு சென்றால்!

பாடியவர்: மதுரைத் தத்தங் கண்ணனார். திணை: பாலை. துறை: தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு அழுங்கியது. சிறப்பு: ஆடுகொள் முரசின் அடு போர்ச் செழியனின் மாடமூதூராகிய மதுரைப் பேரூர்.

(தலைமகன் தன்னுடைய தலைவியினிடத்தே மிகுதியான காதலன்பு கொண்டவன். எனினும், பொருளிலார்க்கு இவ்வுலக மில்லை’ என்ற நியதியை உணர்ந்த அவனுடைய ஆண்மை, அவனை வேற்றுநாடு சென்று பொருள் தேடி வருதலிற் செலுத்து-