பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 79


கின்றது. உள்ளம் பொருளார்வத்தாலும் பெருங்காதலாலும் அலமற, அவன் முடிவிற் காதலையே பெரிதாகக் கொண்டு தன் செலவினை நிறுத்திவிடுகின்றான். அவன் தன் உள்ளத்திற்குச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.)

இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் அருள்நன்கு உடையர் ஆயினும், ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்
யானும் அறிவென் மன்னே யானைதன்

கொன்மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து
5


இன்னா வேனில் இன்றுணை ஆர
முளிசினை மராஅத்துப் பொளிபிளந்து ஊட்ட
புலம்புவீற் றிருந்த நிலம்பகு வெஞ்சுரம்
அரிய அல்லமன் நமக்கே-விரித்தார்

ஆடுகொள் முரசின் அடுபோர்ச் செழியன்
1O


மாட மூதூர் மதிற்புறம் தழீஇ
நீடுவெயில் உழந்த குறியிறைக் கணைக்கால்
தொடைஅமை பன்மலர்த் தோடு பொதிந்து யாத்த
குடைஓ ரன்ன கோள்.அமை எருத்திற்

பாளை பற்றிழிந்து ஒழியப் புறம்சேர்பு
15


வாள்வடித் தன்ன வயிறுடைப் பொதிய
நாளுறத் தோன்றிய நயவரு வனப்பின்
ஆரத்து அன்ன அணிகிளர் புதுப்பூ
வாருறு கவரியின் வண்டுண விரிய

முத்தின் அன்ன வெள்வி தாஅய்
20


அலகின் அன்ன அரிநிறத்து ஆலி
நகைநனி வளர்க்குஞ் சிறப்பின் தகைமிகப்
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய்
நீரினும் இனிய ஆகிக் கூர்எயிற்று

அமிழ்தம் ஊறும் செவ்வாய்
25

ஒண்தொடிக் குறுமகட் கொண்டனம் செலினே!

வறுமையினாலே உள்ளமும் இருண்டுபோன இரவலரின் துயரினைப்போக்கும் அருளினை மிகுதியையும் உடையவரே என்றாலும், கைப்பொருள் இல்லாதவர்களுக்கு, ஈதலாகிய அந்த அருளின் தன்மையும் இயலாததாகும். இதனை யானும் அறிவேன். ஆயினும், என்னை?

இதழ் விரிந்த மலர்களாலே தொடுக்கப்பெற்ற தாரினையும், வெற்றி பொருந்திய முரசத்தினையும் உடையவன், வெல்லும்