பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 81


பட்டை 8. புலம்பு - வருத்தம். வீற்றிருந்த - குடி கொண்டிருந்த நிலம்பகு - நிலம் வெடிப்புண்டு போன 10. ஆடுகொள் முரசு - வெற்றிகொள்ளும் முரசம் செழியன் - பாண்டியன், செழியன்’ எனப் பெயருடைய ஒரு பாண்டியனுமாம். 11. மாடமூதுர் - மாடங்களைக்கொண்ட பழைமையான ஊர்; மதுரைக்கு நான்மாடக்கூடல் என்ற பெயரும், அது நான்கு மாடங்களை கொண்டமையும் ஆகிய செய்திகளையொட்டி மாடமூதூர் என்றனர். 12. நீடுவெயில் - நெடி தாகிய வெயில் குறி இறை - குறுகலான இறைகள்; பாக்கு மரத்தில் இவை விளங்குதலைக் காணலாம். 13. கணைக்கால் - திரட்சிகொண்ட அடிமரம். 14. கோள் அமை எருத்து - காய்த்தல் அமைந்த கழுத்துப்புறம். 21. அரிநிறம் - செவ்வரி பொருந்திய நிறமும் ஆம். அலகு - பலகறை. 23. மூவாப் பசுங்காய் - முற்றாத இளங்காய். 25. அமிழ்தம் - வாயூறல் 26. குறுமகள் - இளமை உடையவள்; தலைவியைக் குறித்தது.

விளக்கம்: வறுமை காரணமாக உள்ளமும் ஒளிகுன்றி இருண்டுபோகும் என்று கூறுகின்ற சிறப்பினை, 'இருள்படு நெஞ்சத்து இடும்பை' என்பதனால் அறிக. அத்தகையவரின் இடும்பையினைத் தீர்க்கும் அருளினை உடையவராதலே சிறப்பாகும். அதனை நன்கு அறிந்தும், இளையோளான தன் காதலியைப் பிரிதற்கு அவனுடைய காதல் நெஞ்சம் இசைய மறுக்கிறது. அவளும் உடன் வந்தால், அவன் எத்தகைய கொடுமையினையும் தாங்குதற்கு இசைகின்றனன். கமுகின் இளங்காயினுள்ளே இருக்கின்ற நீர் மிக்க சுவையுடையதாகும். 'அதனினும் இனிது அவள் வாயின் ஊறல்’ எனக் கூறுவது, அவனுடைய காதல் மிகுதியை உணர்த்தும். கமுகின் வருணனை மிகவும் நயமாக அமைந்துள்ளதனையும் அறிந்து இன்புறுக.

யானை, பிடிக்கு மராமரத்துப் பட்டையைப் பிளந்து ஊட்டும், வருத்தம் மிகுந்த, நிலமும் வெடிப்புண்டுபோன சுரநெறியென்றது, அதன்கண் அவள் செல்லுதற்கு ஆகா மென்மையுடையவள் எனக் காட்டி, அவன் தன் செலவினைக் கைவிட்டதனையும் உணர்த்துவதாம்.

336. உடைக என் வளையே!

பாடியவர்: பாவைக் கொட்டிலார். திணை: மருதம் துறை. நயப்புப் பரத்தை இற்பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. சிறப்பு: வல்லத்து, ஆரியரைச் சோழர் வென்றது. (பழந்தமிழகத்துத் தலைவர்கள் தம்முடைய இல்லத் தலைவியருடன் மட்டுமே கூடி வாழ்ந்தவர் அன்று. பரத்தைமை