பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

அகநானூறு -நித்திலக் கோவை


உடையவராகவும் அவர்களுட் சிலர் வாழ்ந்தனர். ஒருவனுக்கு இற்பரத்தையாக ஒருத்தியும், காதற் பரத்தையாக ஒருத்தியும், ஆக இருவர் இருந்தனர். அவ்விருவருள் ஒரு சமயம் இற்பரத்தையானவள் காதற்பரத்தையின் அழகினைக் குறைகூறியவளாகிப் பழித்தனளாம். அதனைக் கேட்டுச் சினங்கொண்ட அந்தக் காதற்பரத்தை, அந்த இற்பரத்தைக்குத் தோழியராயினோர் கேட்கும்படியாக இவ்வாறு கூறுகின்றனளாம். இத்துறை அமைய விளங்குவது இச் செய்யுள்)

குழற்காற் சேம்பின் கொழுமிடல் அகலிலைப்
பாசிப் பரப்பிற் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கஞ் சொலிய
நாளிரை தழீஇய எழுந்த நீர்நாய்

வாளையொடு உழப்பத் துறை கலுழ்ந் தமையின்
5


தெண்கட் டேறல் மாந்தி மகளிர்
நுண்செயல் அம்குடம் இழீஇப் பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழினர்க்
காஞ்சி நீழற் குரவை அயரும்

தீம்பெரும் பொய்கைத் துறைகேழ் ஊரன்
10


தேர்தர வந்த நேரிழை மகளிர்
ஏசுப என்பவென் நலனே அதுவே
பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்சினக்
கொல்களிற்று யானை நல்கல் மாறே

தாமும் பிறரும் உளர்போற் சேறல்
15


முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யானவண் வாராமாறே வரினே வானிடைச்
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல
என்னொடு திரியான் ஆயின், வென்வேல்

மாரி யம்பின் மழைத்தோற் சோழர்
20


வில்லிண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை
ஆரியர் படையின் உடைகவென்
நேரிறை முன்கை வீங்கிய வளையே!

குழல் பொருந்திய தண்டினையுடைய சேம்பினது, கொழுமையான மடலிடத்தேயுள்ள அகன்ற இலைகளுடன் கூடிய, பாசிபடர்ந்திருக்கும் நீர்ப்பரப்பிலே, தன் குட்டியுடன் தங்கியிருந்தது, பசியால் வருத்தமுற்ற பெட்டை நீர்நாய் ஒன்று. அதன் வருத்தத்தைப் போக்குவதற்குத், தன்னுடைய அந்நாளைக்கான இரையினைத் தேடுவதற்காக எழுந்த அதன்