பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

அகநானூறு - நித்திலக் கோவை


அமைந்துள்ள வண்ணக் கைவேலைகள். 10. துறை கேழ் ஊரன் - துறையினைப் பொருந்திய ஊருக்கு உரியதலைவன். 12 நலன் - அழகு நலன். 14. நல்கல் - அருளுதல். 15. உளர்போல் - நலனுள்ளவர் போல்.16. துணங்கை தூங்கும் - துணங்கைக் கூத்து அயரும்.17. சுடர் - ஞாயிறு. நெருஞ்சி-நெருஞ்சிப் பூ19. திரியேன் - திரியச்செய்வேன். 20. மழைத்தோல் - மேகநிறத்தையுடைய தோற்கிடுகு 21. குறும்பு - அரண் மிளை - காவற்காடு 23. இறை - சந்து. வீங்கிய - செறிவுற்றுள்ள.

விளக்கம்: நீர்த் துறையிலே பெண்கள் தம் கணவன் மாரைப்பற்றிப் பேசுதல் அன்றும் உளதான வழக்கமே என்பதனை, 'மகிழ்நன் பரத்தைமை பாடிக் காஞ்சி நீழற் குரவை அயரும் மகளிர்' என வருவதனால் அறிக.மகளிரும் மதுவருந்தும் வழக்கம் உடையவராக இருந்தமை, 'மகளிர் தெண்கள் தேறல் மாந்தி’ என்பதனால் பெறப்படும்.

'தேர்தர வந்த நேரிழை மகளிர் என்றதனால், பாகனால் கொண்டு தரப்பட்ட இற்பரத்தையர் என்பதும், தானோ தலைவனாற் கண்டு காதலித்துக் கூடுதலைப் பெற்றவள் என் பதும் கூறி, அவளினும் தானே தலைவனிடத்து உரிமை மிகுதி உடைமையினையும் வலியுறுத்துகின்றனள்.

தன்னைப் பழித்த அவர்களைத் தான் வாளாவிட்டிருத்தல், காய்சினக் களிற்றியானை அருளுதலால் பாகன் நெடிது வாழ்தல் போலத், தான் கொண்ட இரக்கத்தினாலேயே என்றும் கூறுவாள், அதுவே, 'பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்சினக் கொல்களிற்றியானை நல்கல் மாறே' என்றனள். இதனால், அவரினும் தான் உயர்வுடைமையும் கூறினளாம்.

'யான் துணங்கை தூங்கும் விழவின்கண் வரின், சுடரொடு திரிதரு “நெருஞ்சிபோல என்னோடு திரியேன்” என்றது, அப்பரத்தையர் போலத் துணங்கைக் கூத்திற்குத் தான் செல்லாதிருந்தது, தான் தலைவனின்பாற் கொண்ட கற்புத் திண்மையினாலேயே என்பதனைக் கூறியதாம்.

'வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைக’ என்ற செய்தி, ஆரியர் படையினர் வல்லத்துக் களத்திலே சோழர்க்கு ஆற்றாது சிதறுண்டு தோற்றோடியதனை உரைப்பதாகும். வல்லம் சோழநாட்டு ஊர்; தஞ்சை மாவட்டத்தே இருப்பது; வடாற்காட்டிலும் வல்லம் உளது.

'மகளிர் மகழிநன் பரத்தைமை பாடிக் காஞ்சி நீழற் குரவையயரும் தீம்பெரும் பொய்கைத் துறைகேழ் ஊரன் எனத் தலைவனைக் குறித்தது, அவன் காதல்கொண்ட தலைவி