பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 85


ஒருத்தியுடன் மட்டுமே கூடிவாழாததும் தன்னுடன் தொடர்பு கொண்டும் பிறரையும் நாடித் திரிதலான செயலையுடைய பரத்தமை ஒழுக்கத்தினன் எனவும் உணர்த்தியதாம்.

மேற்கோள்: ‘மனையோள் ஒத்தலில் தன்னோ ரன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும் என்ற 'புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும் என்னுஞ் சூத்திரப் பகுதிக்கு இச்செய்யுளைக் காட்டி, 'இதனுள் யானவண் வாரா மாறே' எனத், தான் மனையோளைப்போல் இல்லுறைதல் கூறி, ஆண்டுச் செல்லிற் சுடரொடு திரியும் நெருஞ்சிபோல, ஏனை மகளிரை யான் செல்வுழிச் செல்லும் சேடியர்போலத் திரியும்படி பண்ணிக் கொள்வல்' எனக் கூறியவாறு காண்க என்பர் நச்சினார்க்கினியர்.

இதனுள், 'மாரி யம்பின் மழைத்தோற் சோழர்' என்பதனைக் காட்டி, "உவமை யுயர்ச்சியானே உவமிக்கப்படும் பொருட்குச் சிறப்பு எய்துவித்தவாறு கண்டுகொள்க’ என, 'உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை' என்னும் உவமவியற் சூத்திரத்து, உவமம் உயர்ந்ததாக வேண்டும் என்றற்குக் காட்டிக் கூறுவர் பேராசிரியர்.

337. முன்னர் மீண்டனையே!

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணை: பாலை, துறை: முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன், பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.

(ஒரு தலைமகன், முன் ஒரு காலத்தே, தன் தலைவியைப் பிரிந்து, பொருள் தேடிவருதலின் பொருட்டுச் சென்று, அது காலை அவளைப் பிரிந்திருக்க மாட்டாது பெரிதும் வருத்தமுற்றவன், மீண்டும், அவன் உள்ளத்தே பொருள் வேட்கை எழ, அவன், தன் நெஞ்சுடன் கூறிக்கொள்வதாக அமைந்த செய்யுள் இது.)

‘சாரல் யாஅத்து உயர்சினை குழைத்த மாரி ஈர்ந்தளிர் அன்ன மேனிப்
பேர்அமர் மழைக்கண் புலம்புகொண்டு ஒழிய
ஈங்குப்பிரிந்து உறைதல் இனிதன்று

ஆகலின் அவனதாகப் பொருள் என்று உமணர்
5

கணநிரை அன்ன பல்காற் குறும்பொறைத்
தூதொய் பார்ப்பான் மடிவெள் ளோலைப்
படையுடைக் கையர் வருதிறம் நோக்கி