பக்கம்:அகமும் புறமும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 127


சினைதொறும் தூங்கும் பயம்கெழு பலவின்
சுளையுடை முன்றில் மனையோள் கங்குல்
ஒலிவெள் அருவி ஒலியில் துஞ்சும்
ஊரலம் சேளிச் சிறுர் வல்லோன்
வாள்அரம் பொருத கோண்ஏர் எல்வளை
அகன்தொடி செறித்த முன்கை ஒண்ணுதல்
திதலை அல்குல் குறுமகள்
குவளை உண்கண மகிழ்மட நோக்கே’.

(நற்றினை–77)

(மா–யானை; கறங்க–ஒலிக்க; அருங்குறும்பு–காவல் பொருந்திய கோட்டை; எருக்கி–அழித்து; அயாவுயிர்த் தாங்கு–ஓய்வு எடுத்தது போல; உய்த்தன்று–செலுத்தியது; வாள் அரம் பொருத–கூரிய அரத்தால் அராவிய; கோண் ஏர்–வளைந்த அழகிய, ஒண்ணுதல்–ஒளி பொருந்திய நெற்றி; திதலை–தேமல்; குறுமகள்–இளம்பெண்; மடநோக்கு–இளமையுடைய பார்வை.)

‘அரசன் அரிய அரனை அழித்து இளைத்துப் போனது போல யானும் இத்தலைவியின் மனத்தின் திண்மையை நெகிழ்த்தி இளைத்துவிட்டேன். அரசன் அமைதியை நிலைநாட்டும் தொழிலை அமைச்சர் முதலானவர்க்கு விட்டுவிட்டு, தான் இளைப்பாறியது போல யானும் இத்தலைவியை என்னிடம் சேர்ப்பிக்கும் வேலையைத் தோழனிடம் விட்டுவிட்டு இளைப்பாறுவேன் ஆகலின், நெஞ்சே, நீ இனிக் கவலைப்பட வேண்டா' என்ற குறிப்புப் பொருளும் இந்த உவமையால் பெறப்பட்டது.

இதனையடுத்துத் தலைவி அணிந்திருக்கும் வளையலின் வரலாறு பாட்டின் 5ஆம் அடிமுதல் 10ஆம் அடி வரை பேசப்படுகிறது. இவ்வரலாற்றில் பிறிதோர் அழகும் தோன்றுமாறு கவிதை புனையப்பட்டுள்ளது. வளையல் அறுப்பவன் ஊர் வளம் பேசப்படுகிறது. முதற்கண் பலா