பக்கம்:அகமும் புறமும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 • அகமும் புறமும்

எடுத்துக்கூறி, அப்புலவர் பெருமான், ‘இத்தகைய ஒப்பற்ற பட்டினத்தையே எனக்குப் பரிசிலாக அக்கரிகாலன் தந்தாற்கூட யான் என் காதலியை விட்டு வரமாட்டேன்!’ என்று கூறுகிறார். 301 அடிகளையுடைய அப்பாடலில். அதில் மேற்சொன்ன கருத்து இதுதான்:

‘முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வார்இருங் கூந்தல் வயங்கிழை ஒழிய...
வாரேன், வாழிய, நெஞ்சே!’

(பட்டினப்பாலை–218–220)

தமிழன் கொண்ட காதற்சிறப்பை அறிய இவை சிறந்த எடுத்துக் காட்டுக்கள் அல்லவா?

***

கடமையை நிறைவேற்றச் செல்லும் தலைவனுடைய மனப் போராட்டத்தை விளக்கும் பாடல் இது:

தேய்புரி பழங்கயிறு

இந்தப் பரந்த உலகத்தில் என்று மனிதன் தோன்றினானோ, அன்றே அவனைத் தொடர்ந்து துன்பமும் தோன்றியது போலும்! மனிதன் ஆதியில் தனிமையாய்க் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்திருப்பான். குடி இருக்கக் குச்சு வேண்டும் என்று கவலைப்படாமலும், அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்பதுபற்றி அவன் கவலை கொள்ளாமலும் வாழ்ந்த காலம் அது; பசியடுெத்த பொழுது ஆயுதங்களுடன் வெளியே சென்று, காட்டில் நிறைந்திருந்த விலங்குகளில் வேண்டுவனவற்றை வேட்டையாடி உண்டுவிட்டு, அடுத்த வேளை உணவுக்கு அதில் சிறிது மீத்து வைத்துக்கொள்ளவுங்கூடக் கவலைப்படாமல் இருந்த காலம்!