பக்கம்:அகமும் புறமும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 • அகமும் புறமும்

பிள்ளைகள் அக் குதிரையை இழுக்கும்பொழுது தலைவனுடம்பிலிருந்து குருதி பெருகும். இதனைக் கண்ட ஊரார் அப்பெண்ணை அவனுக்கு மணம் முடிக்க முந்துவர்; இப்பழக்கம் எத்தகையதாயினும் தலைவனுடைய மனவளர்ச்சியில் ஒரு படியைக் காட்டுகிறது. தலைவியைப் பெற வேண்டித் தன்மானத்தையுந் துறந்து பனங்கறுக்கினால் செய்த குதிரையில் ஏறத் தலைவன் முற்பட்டான் எனில், அவன் அகங்காரம் முற்றும் அழிந்து விட்டதென்பதற்கு இதனினும் சான்று வேறு வேண்டுமோ?


                                                       . . . .போருள்
அடல் மாமேல் ஆற்றுவேன் என்னை மடல்மாமேல்
மன்றம் படர்வித்தவள் வாழி! சான்றீர்

                                                       . . . வையம்
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும்
இன்னா இடும்பை செய்தாள் – அம்ம, சான்றீர்

                                                       . . . வடிநாவின்
வல்லார் முன்சொல் வல்லேன் என்னைப் பறிர் முன்னர்க்
கல்லாமை காட்டியவள் – வாழி, சான்றீர்
                                                (கலித்தொகை – 141)


கலித்தொகையில் காணப்பெறும் இம்மூன்று தாழிசைகளும் உண்மைக் காதலில் அகங்காரத்திற்கு அழிவு ஏற்ப்டுகின்றது என்று மேலே நாம் குறிப்பிட்டதை வலியுறுத்துகின்றன. .

அடல் மாமேல் ஆற்றுவேன்

என்று சொல்லும்பொழுது அவன் உடல் வன்மையும்,


                        . . . வையம்
புரவு ஊக்கும் உள்ளத்தேன்

என்று கூறும்பொழுது அவன் நெஞ்சுரத்தையும்,