பக்கம்:அகமும் புறமும்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296 • அகமும் புறமும்

பாடு உலகின் எந்தப் பகுதியிலும் காணப்படுகிற ஒன்றுதான். எனினும், இத்தமிழர்கள் என்றுமே இதனை ஆட்சியாளர்க்கு நினைவூட்ட மறந்ததில்லை. தான் பொது மக்களின் தொண்டன் என்ற நினைவு ஒருவனுக்கு இல்லையாயின், அவன் நல்ல ஆட்சியாளன் ஆதல் இயலாது. எனவே, இவர்களைப் பற்றிக் கூறவந்த பொதுமறை,

எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால்
வேறுஆகும் மாந்தர் பலர் (குறள்–514)

என்று கூறிற்று. ‘எத்தனை முறைகளில் ஒருவரைச் சோதித்து முடிபு செய்தாலும் அதிகாரம் கைக்கு எட்டியபின் அவர் எவ்வாறு ஆவார் என்பதைக் கூற முடியாது, என்பதே இக்குறளின் திரண்ட பொருளாகும். குறள் வகுத்த இந்த இலக்கணத்தை ஆட்சியாளருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு வாழ்ந்த கம்பநாடனும் தன் இராம காதையில் பேசுகிறான்:

அறம் நிரம்பிய அருள்உடை அருந்தவர்க் கேனும்

பெறல் அருந் திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்.
(கம்பன்–1476)

பண்பாட்டால் நிறைந்தவர்கட்குக்கூட, பெறுதற்கரிய செல்வம் கிடைத்துவிட்டால், மனம்மாறிவிடும் என்கிறான் கவிஞன். மேனாட்டு ஆக்டன் பிரபு, ‘அதிகாரம் மனிதனைச் சீரழியச் செய்கிறது; எதேச்சாதிகரம் முற்றிலும் அழிந்துவிடச் செய்கிறது.’ என்று கூறியதும் ஆய்தற்குரியது. ஆட்சியாளர் இவ்வாறு மாறிவிடாமல் இருக்க வழி யாது? இதற்குற்ற வழி யாது என்ற வினாவை மிகவும் பழங்காலத்தில் வாழ்ந்த ‘நக்கீரர்’ என்ற புலவரும் கேட்டார். பல நாள் சிந்தித்த பின் அவர் ஒரு முடிபுக்கு வந்து விட்டார். ஆட்சியாளர் சீர்திருந்த வேண்டுமாயின், அதனைப் பிறர் கட்டளை இட்டுச் செய்ய இயலாது. அவர்களாகவே