பக்கம்:அகமும் புறமும்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

323 • அகமும் புறமும்


தனி இனம்

பாரி போன்றோர் ஒரு தனி இனமாவர். ஏனையோருக்கு மனம் வேலை செய்வதைப் போல இவர்கட்குச் செய்வதில்லை. அறிவாளன் உலகைக் காணும்பொழுது முதலிற் காண்பது தன்னை (அகங்காரம்) என்றும் அடுத்துக் காண்பது தனதை (மமகாரம்) என்றும் கூறினோம். பாரி போன்றோர் முதலிற் காண்பது இவற்றையன்று, கூறப்போனால் இறுதியிற்கூட இவற்றைக் காண்பதில்லை அவர்கள். இதுவே வேற்றுமை. இதை உதாரணத்தால் நன்கு அறியலாம். யானும் எனதும் அவர்கள் பார்வையில் வராமையின், ‘புகழ்’ என்னும் தூண்டிலில் அவர்கள் சிக்குவதும் இல்லை. யான், எனதை உடைய மீன்கட்கே புகழ் என்னும் பொன் தூண்டில் உரியது. அவற்றிலிருந்து விடுதலைப் பெற்ற திமிங்கிலங்கள் போல்வர் இவ்வள்ளல்கள். ‘யான் எனது’ அற்றவன் பாரி என்பதைச் சற்று விளங்கக் காணலாம்.

அறிவால் ஆய்ந்தால்....... ?

காட்டில் தேரூர்ந்து சென்ற பாரி முல்லைக்கொடி ஒன்று கொழுகொம்பு இல்லாமல் வாடிய துயரைக்கண்டான். கண்டவன், ‘ஆறு அறிவு படைத்த’ மனிதனாய் பாரி காணப்பட்டது, ‘ஓர் அறிவு’ மட்டும் உடைய உருகொடி. பாரியின் அறிவு வேலை செய்யத் தொடங்கியிருப்பின் யாது நிகழ்ந்திருக்கும் என்று காணலாம். முதலில் இக்கொடிக்கு ஒரு கொழுகொம்பு தேவை என்று நினைத்திருப்பான். ‘எத்தகைய கொம்பு தேவை? சிறிய ஒரு கொம்பு போதுமா, அன்றிப் பெரியதொரு மரம் தேவைப்படுமா? வீட்டிற்குச் சென்றவுடன் ஏவலாளன் ஒருவனை ஏவி நல்லதொரு கொம்பை நடச்சொல்ல வேண்டும்,’ என்ற முறையில் நினைந்திருப்பான். இன்னுங் கொஞ்சம் அறிவு முதிர்ந்திருந்தால், கீழ்க்காணும் முறையில் அவன்