பக்கம்:அகமும் புறமும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 • அகமும் புறமும்

தாய் தந்தையர் காரணம்

தாய் தந்தையரின் அகமணம் எத்தகைய பண்பாட்டை அடைந்திருக்கிறதோ, அந்த அளவிற்குத்தான் மக்கள் மனமும் பண்பட்டு நிற்கும். ஒரோ வழி தக்கார் என்று நம்மால் கருதப்படுகிறவர்களுக்குத் தகவில்லாத பிள்ளைகள் பிறக்கக் காண்கிறோம். இத்தகைய சந்தருப்பங்களில் கொஞ்சம் நின்று ஆராயவேண்டும். ஒருவரைத் தக்கார் என்று நாம் முடிவு செய்ய என்ன முயற்சி எடுத்துக் கொண்டோம்? அவருடைய புற வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்பது ஒன்று தவிர, வேறு என்ன வழியைக் கையாள முடியும்? பிறர் தன்னை நன்கு மதிக்கவேண்டும் என்று கருதுகிற ஒருவன், அப் பிறர் தன்னைக் காணும் நேரம் அனைத்திலும் செம்மையாகத்தானே நடந்துகொள்வான்? அதிலும் தன்னை எத்தகையவனாக உலகம் கருத வேண்டும் என்று நினைக்கிறானோ, அவ்வகையில் தான் வாழ்வதாகப் பிறர் கருதுமாறு செய்வது ஒரு பெரிய காரியமா? உதாரணமாக ஒன்றைப் பார்ப்போம்; ஒருவன் 'பத்தன்' என்று தன்னைப் பிறர் கருத வேண்டும் என்று நினைக்கிறான். ஆகவே, காலையில் இரண்டு மணி நேரம் பூசையில் இருந்து பலத்த சத்தத்துடன் மணி அடிக்கிறான்; உட்கார்ந்தாலும், எழுந்தாலும் 'சிவ சிவா' என்று பலத்த சத்தம் இடுகிறான்; பத்தனுக்குரிய ஏனைய கோலங்களை அணிந்துகொள்கிறான். பலகாலம் இந்நிலையில் அவனைக் காண்கிற உலகம் அவனைச் சிறந்த 'பத்தன்' என்று கூறுவதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், பூசையில் அமர்ந்த அவன், 'காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி' இறைவன் புகழை ஓதுகிறானா இல்லையா என்பதை யார் கூறமுடியும்? கைகள் மணி அடிக்க, வாய் தேவாரத்தை ஓதலாம். ஆனால் இவை இரண்டின் செயலிலும் ஈடுபடாமல் அவன் மனம் கறுப்புச் சந்தையில் பொருள்