பக்கம்:அகமும் புறமும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 • அகமும் புறமும்

ஓரளவாவது இசையில் ஈடுபடத்தான் செய்வர். விலங்கினங்களிற்கூடப் பல இசையில் ஈடுபடும் என நூல்கள் கூறுகின்றன. மதங்கொண்ட யானையும் இசைக்குக் கட்டுப்பட்டு நிற்குமாம்.


காழ்வரை நில்லா கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரைத் தங்கியாங்கு.

(பாலைக்கலி–1)

எனக் கலித்தொகை கூறுவதால் இவ்வுண்மை நன்கு விளங்குகிறது.

இனிய மழலை

கண்ணன் குழல் வாசித்தபொழுது மாடுகளும் ஏனைய கொடிய விலங்குகளும் அவன் இசையில் ஈடுபட்டு அப்படியே நின்றுவிட்டன என்றும், ஆனாயர் குழல் ஊதியபொழுது,

‘மரங்கள் மலர்ச்சினை சலியா;கான்யாறும் கலித்து ஓடா’

என்று கூறப்படுகிறது. இத்துணைச் சிறப்பு வாய்ந்த இசையில் ஈடுபடாத மனம் உடையார் இருக்கவும் கூடுமா? இவ்வாறு இருக்கவும், ஆசிரியர்,


குழல்இனிது யாழ்இனிது என்ப தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்

(குறள்–66)

என்று கூறக் காரணம் என்னை? இக்குறளுக்கு உரை கூற வந்த ஆசிரியர் பரிமேலழகர், ‘இசையைக் கேட்டவர் அவற்றினும் மழலைச் சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம்’. என்று பொருள் எழுதிச் சென்றார்.

இக்குறளில் வள்ளுவப் பெருந்தகை கூறியது உயர்வு நவிற்சி அணியா என்பது ஆராய்தற்குரியது. இதற்கு