பக்கம்:அகமும் புறமும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 • அகமும் புறமும்


செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்ம லோர்எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி!
நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்
இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்
மாண்தொழின் மாமணி கறங்கக் கடைகழிந்து
காண்டல் விருப்பொடு தளர்புதளர் போடும்
பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர்
தாங்குமதி வலவஎன்று இழிந்தனன் தாங்காது
மணிபுரை செவ்வாய் மார்பகஞ் சிவண
புல்லிப் பெரும . . . . .
இமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனை
பயிர்வன போலவந் திசைப்பவும் தவிரான்
. . . . அழுங்கினன் அல்லனோ . . .

(அகம்–67)

இசையில் ஈடுபடுகிற ஒரு மனம் மட்டுமன்று இப்பாட்டில் காணும் தலைவனுடைய மனம்; அதையும்விட அவன் பரத்தைமாட்டு விருப்புக்கொண்டு புறப்பட்டான் அன்றோ? இவ்வாறு இருந்தும் அவன் இரண்டு இன்பங்களையும் துறந்துவிட்டு இருப்பதற்குக் காரணமாய் இருந்தது எது? தலைவிக்கு வருத்தம் உண்டாகும் என்ற பெருநோக்கத்தால் அவன்நின்றுவிடவில்லை. அவ்வாறாயின், அவன் புறப்பட்டிருக்கவே மாட்டான். ஊரார் அவனை ஏளனம் செய்வர் என்பதற்காகவும் அவன் நின்றுவிடவில்லை. அவ்வாறாயின், பலர் அறியத் தேரில் ஏறிக்கொண்டு புறப்பட்டிருக்கமாட்டான். பின்னர் ஏன் அவன் செலவு தடைப்பட்டது? மனைவிமாட்டுக் கொண்ட காதலினும், பிறர் பழிச்சொல்லில் கொண்ட அச்சத்தினும், வலிய ஒன்றால் அன்றோ அவன் போவது தடைப்பட்டது? அது எது? அவன் குழந்தைமாட்டுக் கொண்டிருந்த அன்புதான். குழந்தையிடம் இத்தகைய