பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

99 புற மிருக்கட்டும். இன்று கழகத்தின் தீவிர வாதிகளில் பலர் முன்பு நீதிக் கட்சியில் இருந்ததே இல்லை. ஏன், நானே, நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மாறும் நேரத் திலேதான் கட்சியில் சேர்ந்தேன். வெள்ளையன் திரு.வி.க. வை நாடுகடத்தினான்; அப்போது பதவி வகித்த நீதிக் கட்சியினர் "திரு.வி.க. வை நாடு கடத்தினால் ராஜினாமா செய்து விடுவோம்" என்றார்கள். நாடு கடத்துவதும் நிறுத்தப் பட்டது. திரு. வி. க. தேசீய வாதிதான்; இருந்தும் நீதிக்கட்சி யினர் அவரைப் பற்றி ஏன் கவலைப் பட்டார்கள் என் பதை குற்றம் சாட்டுவோர் உணர வேண்டும்! .66 1885-ம் ஆண்டில், பம்பாயில், ஹ்யூம் " என்ற வெள்ளையரால் ஆரம்பிக்கப் பட்டு, சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையில் நடந்த முதல் காங்கிரஸ் மாநாட் டிலே என்ன தீர்மானம் தீட்டினார்கள்?-"வெள்ளை யனே, வெளியேறப்பா! என்றா? இல்லையே! "சலுகை தரவேண்டும்; ஜமீன் தார்களுக்கு உதவ வேண்டும்; இந்தியர்கட்கு வேலை தரவேண்டும் " என்று வெள்ளையனைக் கேட்கும் 'குலாம்'களாகத்தானே இருந் தார்கள்? இதையும் நேரு எழுதி வைத்திருக்கிறார், நமக்கு உதவியாக! ஜஸ்டிஸ் கட்சியில் சரிகைத் தலைப்பாக்களும், பட்டுப் பட்டாடைகளும், மிட்டா மிராசுகளும் நிறைய இடம் வகித்ததால், வெள்ளையனின் தாசர்களாக இருந்திருக் கலாம். அதனால்தானே 'சேலம்' செய்தோம்! அதனால் தானே பி.டி. ராசன் போன்றவர்கள் வெளியேறவும் செய்தார்கள். அது எந்தக் காலம் ? இது எந்தக் காலம்? அதற் கிடையே என்ன சம்மந்தம்?