11
________________
11 பைத்தியக்காரன் இல்லை. பசியால் பாதிக்கப்பட்ட பரம ஏழை ! பசி தீர பிணக்கறியைத் தின்றேன் என்றான். "இல்லை! நீ பைத்தியக்காரன்தான்" என்று கூறினர் போலசார். அவன் இல்லவே இல்லை யெனக்கூறினான். ஒப்புக்கொள்ளுவார்களா அரசாங்கத் தினர் ? ஒப்புக்கொண்டால் மறு நாளே பத்திரிகையில் வெளிவரும் செய்தியைக் கண்டு வெளி நாட்டார் எள்ளி நகையாடுவார்களே என்று கூறி, அவன் பைத்தியக் காரன்தான் என்று பதிவு செய்து கொண்டு அவனைப் பைத்தியக்காரர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டார்கள். என்னைக் கேட்டால் அவன் உண்மையில் பைத் தியக்காரன்தான் என்று கூறுவேன். பசித்தால் வேகும் பிணத்தை பிடுங்கித் தின்னுவதைவிடத் தெருவில் திரியும் மந்திரிகளையல்லவா பிடுங்கித் தின்றிருக்க வேண் டும்? பசிக்கொடுமையால் மக்கள் புளியங் கொட்டையை சாப்பிட விடுகிறது நமது அரசாங்கம். ஏன், நமது ஆச் சாரியார் புல்லைத் தின்னுங்கள் என்றுகூட வாய் கூசாமல் சொல்லியிருக்கிறாரே ! இதையும் கேட்டுக் கொண்டு தானே நாம் சும்மாயிருக்கிறோம். அகிம்சையில் நமக்கு நம்பிக்கை இருந்தால் திண்டிவனத்திற்கருகே கத்தாழை தின்று ஆறுபேர் மாண்டதாகப் பத்திரிகையில் படித்தோமே, அதைப் பார்த்து நம் மந்திரிகள் மனம் பதைபதைத்ததா? இல்லையே ! அவர்கள் தான் உணவுக்கு உலகத்தையும், அளவுக்கு டில்லியையும் நோக்கி ஆரூடம் பார்க்கிறார்கள் அறிவு கெட்டத் தன்மையில் !