12
________________
12 நமது உணவு மந்திரியார் ஒருமுறை டில்லிக்குச் சென்று தென்னாட்டார் உணவுப் பற்றாக்குறையால் கஷ்டப்படுவதாகக் கூறினார். உடனே முன்ஷி அதற்கு பிறகு “நான் காரணம் கண்டு பிடித்திருக்கிறேன். எல்லாம் தீர்ந்து விடும்" என்றார். உடனே நமது நெல் மேக மந்திரி ரோச் விக்டோரியாவுக்கு ஆனந்தம் பொங்கி விட்டது. காரணம் கேட்டார். உணவு மந்திரி கூறுகிறார் : "உணவு உற்பத்தி குறைந்து விட்டது தான் காரணம். உற்பத்தி குறைவதற்குக் காரணம் விவசாயம் குறைந்து விட்டது. விவசாயம் குறைந்ததற்குக் காரணம் நெல் விளைச்சல் அதிகமில்லை. அதிகம் இல்லாததால் அரிசி குறைந்து விட்டது. அரிசி குறைந்ததற்குக் காரணம் மழையில்லை. மழையில்லாத தற்குக் காரணம் ஆகாயத்தில் மேகமில்லை. மில்லாததற்குக் காரணம் மரங்கள் அதிகமில்லை. அதனால் மரம் நடுவிழா ஆரம்பமாகட்டும். சரியாகிவிடும். ஆகவே, நீங்கள் உங்கள் மாகாணத்தில் மரம் நடும் வேலையைத் துவக்க ஏற்பாடு செய்யுங்கள்• நான் வந்து விழாவை நடத்தி வைக்கிறேன் !" என்றார். எஜமானர் உத்திரவுப்படி இந்த மானங்கெட்ட மந்திரிகள் ஊர் ஊராக மரம் நட ஆரம்பித்தார்கள். ஒன்றாவது பிழைத்ததா ? இல்லையே! இதற்காக வரிப் பணம் எத்தனை லட்சம் வீணாகியது! மரம் இல்லாத இடத்தில் மரம் நடுவது கூட நியாயம் என்று ஒப்புக் கொள்வோம். அந்தக் காரியத்துக்காக இருக்கும் மரங்களைக் கூடவா வெட்டி விடுவது? கேளுங்கள், ஓர் அதிசயத்தை ! வடநாட்டில் ஒரு திறந்த வெளியில் மரம் நடும் விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.