14
________________
14 பொதுக் குழுவிற்கு கட்டுப்பட்டு நடப்பது! அதன் முடிவுப்படி கழகத்தவர் நடப்பதுதான் கடமை! நாம் தேர்தலில் நிற்பதில்லை என்று சேலத்தில் முடிவு கட்டினோம்! அதன்படியே நடந்து வருகிறோம். நம்மைக் கேட்கிறார்கள் பொதுமக்கள், 'நீங்கள் ஏன் தேர் தலில் நிற்கவில்லை' என்று. நான் அவர்களுக்குக் கூற ஆசைப்படுகிறேன், நமக்கு நிற்பதற்கு தகுதியோ திறமையோ இல்லை என்ற காரணத்தாலல்ல அம்முடிவு. இன்றைய சூழ்நிலையில் நாம் சட்டசபைக்குச் செல்வது என்று பட்டதால்தான். சபைக்குப் போகாததால் நமக்கு அரசியல் ஞானம் இல்லை என்று கூறிவிட முடியாது. அண்ணா கூறுவது போல் இந்த ஆட்சி பீடம் நமக்கு இடங்கொடுத்தால், அடுத்த மூன்று நாட்களுக்குள் ஆச்சரியப்படும்படி ஆட்சியை நடத்திக் காண்பிப்போம். அப்படிப்பட்ட அறிவாளிகளும், அரசியல் ஞானம் படைத்த வாலிபர் களும் நம்மிடையே இருந்து வருகிறார்கள். இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடாத போது நாம் யாரை ஆதரிப்பது, யாருக்கு நமது ஓட்டுக்களைப் போடுவது என்ற சந்தேகம் நம்மைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டபடி இருந்தன. நமது பழைய இந்தத் தொகுதியில் தோழர் ஜீவானந்தம் தேர் தலுக்கு நிற்பது உங்களுக்குத் தெரியும். அவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். நண்பர். சுயமரியாதைக்காரர். அவர் அண்ணாவைப் பல முறை சந்தித்து தேர்தலில் கலந்து கொள்ளும்படிக் கேட்டார். அண்ணா சந்தோஷப்பட்டார் அவரது