பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

________________

15 ஆர்வத்தைக் கண்டு. தேர்தலில் தம் கட்சி கம்யூனிஸ்டு களுக்கு நண்பராக இருந்து— தோளோடு தோள் சேர்ந்து வேலை செய்யும்- அதுவே எனது ஆசையும் என்று கூறினார். ஆனால், ஐக்கிய முன்னணியில் சேர்ந்து காங்கிரசைத் தோற்கடிக்க அழைத்தார் ஜீவா. ஐக்கிய முன்னணி என்பது யார் யாரைக் கொண்டது என்ற கேள்வியை எழுப்பினார் அண்ணா ! "நீங்களும் நானும் பெரியாரும் சேர்ந்துள்ள கட்சிகள் தான் என்றாராம் ஜீவா. " மிகவும் சந்தோஷம். ஆனால் நீங்கள் முதலில் பெரியாரின் சம்மதம் பெற்று வாருங்கள் " என்றார் அண்ணா. பிறகு வந்த ஜீவா, "ஐயா உங்களை ஒரு கட்சியாக ஒப்புக் கொள்ள முடியாதென்று கூறுகிறார்". ஆகவே, நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் ” என்றார். தோழர் ஜீவானந்தம் மிகவும் நல்லவர் மட்டுமல்ல; அரசியல் ஞானம் படைத்த அறிவுடமையை பேச்சாளியுமாகும். அவருக்குத் தெரியும் ஐக்கிய முன்னணி என்பது சரிசமத்துவம் கொண்ட கட்சிகள் ஒன்றோ டொன்று உயர்வு தாழ்வற்ற முறையில் பாவிக்க வேண்டுமென்பது. ஒரு தனிப்பட்ட வியாபாரக் கம் பெனியை எடுத்துக் கொண்டாலும், அக் கம்பெனி யுலுள்ள பாகஸ்தர்கள் ஒருவரை ஒருவர் சரிசமானமாக நடத்தினால்தான் அந்தக் கம்பெனியும் வேலை செய்ய முடியும். அப்படிக்கின்றி, நம்மை கட்சி என்றே ஒப்புக் கொள்ள முடியாத ஒருவனுடன் கூடி எப்படி பணியாற்ற, ஐக்கிய முன்னணி அமைக்க முடியும்? ஆகவே அண்ணா தனது கட்சியின் பொதுக் குழுவின் சம்மதம் பெற்று தெரிவிப்பதாகக் கூறினார்.