பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

________________

16 பொதுக்குழு மதுரையில் கூடியது. சுமார் 45 பேர்கள் விவாதித்து கடைசியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நமது உதவியைத் தருவது என்று முடிவு செய்தது. திராவிடநாட்டுப் பிரிவினைக்கு ஆதரவுதேட, சட்டசபையிலும் பாடுபடுவதற்காக ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட கம்யூனிஸ்டுகளுக்கு நிபந்தனை போட்டது. அதை உத்யோகப் பூர்வமாகவும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தெரி வித்தது. அவர்கள் தங்கள் முடிவை "ஜனசக்தி" தாள் மூலமாக சூசகமாகத் தெரிவித்தனர். மதுரைக் கூட்டத்திற்கு முன்பு பல கூட்டங்களில் நாங்கள் திரா விடநாட்டுப் பிரிவினையை ஆதரிக்கிறோம் என்று பேசி வந்ததுடன், அக்கட்சியின் தலைவர் டாங்கேயும் திராவிட நாடு பிரிவினை நியாயமான கோரிக்கைதான் என்று கூறி வந்தவர்கள், நம்முடைய மதுரை தீர்மானத்திற்குப் பிறகு "திராவிடநாடு பிரிவினை அர்த்தமற்றது. திராவிட ஆரிய கலாசாரம் என்பது ஒன்றுமில்லை." என்று கூறிவிட்டார்கள். காரணம்? நமது ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டுமென்ற நிபந்தனை கண்டு. மேடையில் பேசி வந்தவர்கள், அந்தக் குறுகிய காலத்திற்குள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளும் சக்திவாய்ந்தவர்களை நாம் எப்படி நம்ப முடியும்? கஷ்ட நஷ்டங்களைத் தாங்கி, ஏச்சல் பேச்சுகளை ஏற்று, தடியடிபட்டு, சிறை சென்று, துப்பாக்கிப் பிரயோகத்திற்கு ஆளாகி, கட்டிக் காப்பாற்றிய நமது இலட்சியத்தை- நமது ஜீவதார உரிமையாகிய திராவிடநாடு பிரிவினையை மறந்து நாம் எப்படி உதவி செய்ய முடியும்? நமக்கு கம்யூனிஸ்டுகளிடம் அளவற்ற மதிப்பு உண்டு. அதற்காக லட்சியத்தை விட்டுக்