பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

17 . கொடுக்க முடியுமா? முடியாது! ஆகவே நிபந்தனை காட்டினோம். நமது நேசக் கரத்தை நீட்டினோம். கம் யூனிஸ்டுகள் இசையவில்லை, நமது நட்பைப்பெற. ஆகவே நாம் நமது லட்சியத்தை ஒப்புக் கொள்ளுபவர்கள் யார் யார் என்று பார்த்தோம். மாவட்ட கமிட்டி சிபார்சு செய்தவர்களுக்கு தேர்தலில் உதவி செய்வது என்ற முடிவுக்கு வந்தோம். இதில் தப்பிதம் என்ன இருக்கிறது! நாம் ஏதும் முடியாத ஒன்றைக் கேட்க வில்லையே ! இதுவரை மேடையில் திராவிடநாடு பிரி வினையை ஆதரித்தவர்களைத்தானே கேட்டோம் ஒப்பந்தத்தில் 'கையெழுத்து போடு' என்று. ‘முடியாது’ என்றார்கள். சந்தோஷம்! தேர்தல் வரை ஒதுங்கி நிற்பது அல்லவா நாணயமுள்ளவர்களுக்கு அழகு. அதைவிட்டு தியாகிகளின் பெயரைச் சொல்லி நம்மைத் திட்டுவது நியாயமா? அதிலும் நமது ஜீவானந்தமா நம்மோடு பல நாட்கள் பழகி, நமது கொள்கைக்காகப் போராடியவரா, நம்மையே திட்டுவது? தோழர் ஜீவா கூட்டமொன்றில் குறிப்பிட்டாராம், தி.மு.கழகம் தனது முடிவைத் தேடி நடந்து கொண்டிருக்கிறது என்று. ஜார் மன்னரை அழித்து-ஹிட்லரின் இருப்பிடம் தெரியாமல் செய்து-முசோலினியைச் சென்ற இடம் தெரியாமல் ஓடச் செய்த கம்யூனிஸ்ட் கட்சியுடன் நாம் மோதிக்கொள்ளுகிறோமாம். இவர் களுக்கு ஏற்பட்ட கதியே தி.மு. கழகத்துக்கு ஏற்படு மாம்! யார் கூறுவது? நமது மதிப்பிற்குரிய ஜீவா. நமக்கு கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரியும் அவர்களைவிட நாம் கம்யூனிஸ்டுகளின் விரோதி