பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

________________

18 களல்ல. அவர்கள் நம்மை விரோதிகளாகப் பாவிக்கின் றார்கள். நாம் கம்யூனிசம் வேண்டாம் என்று கூற வில்லை. பாகிஸ்தான் பிரிந்த பிறகு அங்கே கம்யூனிஸ்ட் கட்சி இல்லையா? இருக்கிறதே, பாகிஸ்தான் கம் யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை வைத்துக்கொண்டு அதைப் போலவே திராவிடநாட்டுப் பிரிவினைக்குப் பிறகு திராவிடநாட்டு கம்யூனிஸ்ட் கட்சி என்று வைத்துக் கொள்ளலாமே! அதைவிட்டு எங்களை ஏன் தூற்ற வேண்டும்? குறைகூற வேண்டியது வேறிடத்தைப் பார்த்தல்லவா! எங்கள் நேசத்தால் அவர்களுக்கு நஷ்டமேற்பட்டிருக்காதே! உண்மையிலேயே கம்யூனிஸ்ட் கட்சி பூட்சுவாக்களின் விரோதி என்றால் சாமியப்பாவை அல்லவா எதிர்த் திருக்க வேண்டும் ? தஞ்சை மண்ணிலே குருதி கொட்ட காரணமாக இருந்த சாமியப்பாவை அல்லவா தோற் கடிக்கப் பாடுபடவேண்டும்? அதைவிட்டு தி.மு.கழகத்தைப் பழித்து கூறுவது கூடாதென்று ஜீவாவுக்குத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஜீவாநல்ல உழைப்பாளி. பேச்சாளி. அவரது உழைப்பும் பேச்சும் நமக்கு மிகமிக அவசியம். அவரை சட்டசபையில் போட்டு அடைத்துவைப்பதைவிட வெளியில் இருப்பதுதான் மக்களுடைய நன்மைக்கு மிகவும் நல்லது. ஆல்பர்ட் டைப் போன்ற சட்ட அறிவாளிகள் அங்கு சென்று, ஜீவா நம்முடன் இருந்தால், நாட்டில் இன்னும் நல்ல காரியத்தைச் செய்யலாம். ஆகவே, ஆல்பர்ட் ஜேசு தாசனுக்கு உங்கள் வாக்குகளை அளித்து அவரை அங்கு அனுப்புங்கள்.