பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

________________

22 மக்களின் ஆதரவிலே ஆட்சிக்கு வந்து-மக்களின் நலத்திலேயே நாட்டம் செலுத்தாது-தங்கள் சுகபோக வாழ்விலேயே கண்ணும் கருத்துமாக கொலு வீற்றிருக்கும் நம் காங்கிரஸ் மந்திரிகளுக்கு, பாடம் கற்பிக்கும் வகையிலே வெளி நாட்டுச் செய்திகள் பல வந்த வண்ணம் இருக்கின்றன. அண்மையில் பதவிக்கு வந்த இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில், தன் சம்பளத்தைக் குறைத்துக்கொண்ட தோடு, தன் சக மந்திரிகளின் சம்பளத்தையும் தகுதிக் கேற்றவாறு குறைத்திருக்கிறார். ஆண்டொன்றுக்கு 10,000 பவுன் சம்பளமாக இருந்ததை 7,000 பவுனாகத் தன் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறார். சிவப்புச் சீனாவின் தலைவர் மாசே துங் பா தம் 800 ரூபாய்கள் தான் சம்பளம் பெறுகிறாராம். பாரசீகப் பிரதமர் முசாதிக் மிகக் குறைந்த அளவு சம்பளம் பெறுவதோடு, தனக்காக உள்ள சர்க்காரின் கார்களைக்கூடப் பயன் படுத்திக் கொள்வதில்லையாம். அதே நேரத்தில் நம் மந்திரிகளைக் கவனிப்போம். இவர்கள் மாதம் ஒன்றுக்கு பல்லாயிரக் கணக்கிலே சம்பளம் பெறுவதோடு, எதற்கெடுத்தாலும் தனி அலவன்ஸ் பெற்றுக் கொள்வதில் தவறுவதில்லை. சென்னை மந்திரிகள் ஓராண்டுக்கு முன்பு தங்கள் சம்பளம், அலவன்ஸ் போதாமல், தங்கள் குடும்ப மருத்துவச் செலவிற்கும் அரசாங்கச் செலவில் பணம் பெறும் சலுகையைத் தீர்மானமாக்கி, நிறைவேற்றிக் கொண்டது நினைவிருக்கலாம். தேர்தல் பிரசாரத்திற்கு வேறு சர்க்காரின் பணத்தை பாழ்படுத்தினார்கள்.