பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 படும் மந்திரிகள் -சோமநாதர் கோவில் திருப்பணியில் ஈடுபடும் மந்திரிகள்-தீபாவளியைத் தேசியத் திருநாள் போன்று கொண்டாடும் அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த நாடு எப்படி உருப்பட முடியும்? ஆரிய மதப் பண்டிகையான தீபாவளிப் பண்டி கையை நமது மாஜி பஞ்ச மந்திரி முன்ஷியார் வெகு சிறப்பாகக் கொண்டாடினார். இந்தியக் குடியரசு தலைவர் இராஜேந்திர பிரசாத், பிரதமர் ேகு பல உயர்தர உத்யோகஸ்தர்கள்கூட அம்மாதிரி பண்டிகையில் கலந்து கொண்டிருக்கிறார்கள் பலமுறை! இதன் அர்த்தமென்ன? தென்னாட்டு-திராவிட மக்கள் பகிஷ்கரிக்கும் தீபாவளியை வட நாட்டுத் தலை வர்கள் வெகுவாக வரவேற்கிறார்கள் என்பதைக் காட்டு வதற்குத்தானே பயன் படுகிறது! நாட்டிலே பஞ்சம் தலைதூக்கி நிற்கும் நேரங் களிலே, பொறுப்பும் கடமையும் உணர்ந்த மந்திரி களால் பண்டிகை கொண்டாடவா நேரமிருக்கும்? அதற்கு மனம்தான் துணியுமா? துயரக் கடலில் தத்தளித்து நிற்கும் நாட்டு மக்களின் இன்னல் களைய இலாயக்கற்ற-சிறிதும் தகுதியோ திறமையோ இல்லாத வெறும் சுய நல அரசியல் சூதாட் டக்காரர்களெல்லாம், ஆட்சிக்கு வந்ததினால் ஏற்பட்ட பலன்தானே நாடு இன்று இக்கதிக்கு உள்ளாகி இருக் கிறது? இதைத்தானே உண்மையான தேச பக்தர்கள் உள்பட எல்லா எதிர்கட்சித் தலைவர்களும் எடுத்துக் கூறி வருகின்றனர் ! இதை எடுத்துச் சொன்னால் அடக்குமுறை பாணத்தைக் காட்டி, சிறையிலே தள்ளி,