27
________________
27 ஆனால் பிரதமரே வேதனையோடு வெளியிடுகிறார். ராஜ்யத்தில் குற்றங்கள் அதிகமாகிவிட்டன என்று ! ராமராஜ்யம் கிடைத்தவுடனே பஜனை மடங்கள் அதிகமாகுமென எண்ணினோம். அவர்களும் அந்த 'சத' காரியத்தில்தான் ஈடுபட்டிருந்தார்கள். நாடாளும் பொறுப்பு கிடைக்கும் வரையில் நிர்வாகம் என்றால் 'ராம்தூன்' பாட்டைப்போல சுலபமானது என்றுதான் நினைத்திருந்தார்கள். இப்போது நிர்வாகம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பது தெரிந்திருக் கிறதே தவிர,நிர்வாகத்தை நடத்திச் செல்லும் பாதை தெரியாமல் தவிக்கிறார்கள். ஜார், ரஸ்புடீன் பாதைகளிலே பார்வையைச் செலுத்துவதால் இன்பப் பயணத்தை இழந்து துன்பச் சிந்து இசைத்திடுகிற இளித்த வாய்த்தனத்துக்கு ஆளாகிறார்கள். புதிய புதிய பள்ளிக்கூடங்கள் திறக்கிறார்கள் என்று கேள்விப்படவில்லை. புதிய புதிய ஆலைகள் அமைக்கிறார்கள் என்று கேள்விப்படவில்லை. புதிய புதிய தொழில்களை ஏற்பாடு செய்தார்கள் என்று கேள்விப்படவில்லை. புதிய புதிய போலீஸ் ஸ்டேஷனை அமைக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. அதோடு குற்றங்களும் பெருகுகின்றன என்று மந்திரியாரே தகவல் தருகிறார். போலீஸார் திறமை அற்றவர்களா? பலசாலிகள் அல்லவா? கொலையைக் கண்டால் குலை நடுக்கமெடுத்து கொலைகாரனை விட்டுவிட்டு ஓடக்கூடிய கோழைகளா? திருடனைத் தீண்டுவது பாபம் என்று கூறுகிற குறை மதியாளர்களா? இல்லை; கெட்டிக்காரர்கள். ஆனாலும்