பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

________________

29 பயன் படுத்தப்படுகிறது போலீஸ். நாட்டைக் காப்பாற்றுவது - நாசத்தைத் தடுப்பது என்கிற லட்சியத்திலிருந்து போலீசார் பிரிக்கப்பட்டு, காங்கிரசையும், காங்கிரஸ் ஆட்சியையும் கரையாமல் கண்காணிக்க உப் யோகப் படுத்தப்படுகிறார்கள். எந்த மந்திரி எங்கே போகிறார்; யார் கருப்புக்கொடி பிடிக்கிறார்கள் என் பதை அறிந்துகொண்டு குதிரைப் பட்டாளத்தை விடலாமா? 'குன்றத்தூர்' நடத்தலாமா? - என்று யோசனை செய்யும் நிலைமையை போலீசுக்கு ஏற்படுத்தி விட்டு குற்றங்கள் மலிந்து விட்டன என்றால் ஏன் மலியாது? குற்றங்களைக் கண்டு பிடிக்க போலீசுக்கு நேரமேது? ஒரு எம்.எல்.ஏ. பேசுகிறார் என் றால் பாதுகாப்புக்கு எண்பது போலீஸ் தேவைப்படு கிறதே! எப்படி குற்றங்களைக் கண்டு பிடிக்க முடியும் அவர்களால்! மாதத்துக்கு முப்பது நாள் மந்திரிகள் சுற்றுப் பயணம் நடத்துகிறார்கள். ஊருக்கு ஊர் போலீஸார் மந்திரிக்கு 'பராக்கு' கூறும் பணியிலே ஈடுபடவேண்டியிருக்கிறது. குற்றங்களைக் குறைப்பது ஆகிற காரியமா? கூட்டம் நடத்த அனுமதி, ஒலிபெருக்கி வைக்க உத்தரவு - இப்படி எல்லாம் எதிர்க்கட்சிகளை மடக்கும் புதுப் புதுச் சுமைகளை போலீஸார் தலையில் சுமத்தி விட்டுப் புலம்புகிறது, சர்க்கார்! பூனையின் தலையில் யானை அளவு பாரத்தைத் தூக்கி வைத்துவிட்டு, எலித்தொந்திரவு அதிகமாகிறது, என்று சொல்வது கேலிக்குரியது மட்டுமல்ல; கடைந் தெடுத்த முட்டாள் தனம் !