36
________________
36 விருதுநகராருக்கு விண் வீராப்புத் தேவையில்லை என்று தான் கருதுகிறோம். 'அந்த மாதிரி மக்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள்' என்பதிலே என்ன தொனிக் கிறது! தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற உறுதி தான் ஒலிக்கிறதே தவிர, காங்கிரஸ் செல்வாக் இழந்து விட்டதென்பதை மறுப்பதற்கான பதில்கள் பளிச்சிடவில்லை. செல்வாக்குப் போய் விட்டதென மக்கள் கூறுவதாக செவியில் விழுகிறது என்று புலம் பிய ராஷ்டிரபதியார் செல்வாக்குச் சீரழியவில்லை என்பதற்கான ஆதாரங்களையல்லவா அள்ளி வீசியிருக்க வேண்டும்! சட்டியில் இருந்தால் அல்லவா அகப்பை யில் வரும் ! "காங்கிரஸ்காரர்களுக்குள்ளேயேகாங்கிரசின் பலத்தைப் பற்றி சந்தேகங்கள் இருக்கின்றன. அவைகள் ஒழிய வேண்டும்." உடைந்துபோன தேர் - ஓட்டையாகிக் கிடக்கும் கேடயம் - உபயோகமற்ற வாள்- ஒலிக் கிளம்பாத முரசு- உணர்ச்சியில்லாத வீரர்கள்- ஒற்றைக்கால் குதிரைகள் - இவைகளை வைத்துக் கொண்டு இந்தப் போரில் குதிக்க முடியாது என பயப்படுகிறார்கள் சேனைத் தலைவர்கள். அரசனோ, அந்தப் உ ங் க ளு க் கு வேண்டாம் என்று வீரஉரை கூறுகிறான். க 66 அதைப் போலத்தான் இருக்கிறது தேர்தல் கமிட்டியில் நடத்திய பிரசங்கம். து. பயம் காங்கிரஸ் சேனாதி பதிக்கே சந்தேகமிருக்கிறது போரின் முடிவைப்பற்றி! சிங்க க "ஜெயித்து விடலாம்" என்று