38
________________
து 38 முயல்வது அறிவுடமை. செத்துப்போன செல்வாக்கை புதுப்பிக்க புதுப்புது ஸ்டண்டுகள் நடத்துவதும்- எதிர் கட்சி மீது எரிந்து விழுவதும்- அழிந்த கௌரவத்தை ஆழக் குழி தோண்டி புதைத்து விடும் புன்மைச் செயல் கள். இதைக் காமராசர் உணர மறுக்கிறார். வேடிக்கை காட்டி மக்களை மயக்கி விடலாமென்று எண்ணுகிறார். "நகரங்களிலும், கிராமங்களிலும் கூட்டங்களும், ஊர்வலங்களும் நடத்துங்கள் " என்று உபதேசிக்கிறார். ஊர்வலங்களையும், கூட்டங்களையும்தான் மக்கள் நடத்து கிறார்களே, கண்டிருப்பாரே காமராசர் ! நெசவாளர் ஊர்வலம்- வேலையற்றவர் ஊர்வலம்- அரிசி இல்லா தவர் ஊர்வலம் - இப்படி எத்தனை கண்ணீர்த்துளி களின் பவனி க ள் நடைபெறுகின்றன, கவனிக்க வில்லையா காமராசர் ! "காங்கிரசுக்கு ஜே!" போட்டு ஒழித்து விடக் கூடிய பிரச்னைகளா இவை எல்லாம் ! காமராசரின் தேர்தல் ஊர்வலம் கண்ணுக்கு ரம்யமாக இருக்கும். கருத்தைக் கவரும் ஊர்வலங்கள் அல்லவா நாட்டில் நடைபெறுகின்றன. ஊர்வலம் மட்டுமா ? ஊர்வலத்திலே உறுமுகிற போலீசார் எவ்வளவு ! உதிரம் குடிக்கிற துப்பாக்கிகள் எத்தனை ! தலை பிளக் கும் தடிகள் எவ்வளவு ! மானையும் மயிலையும் வேட்டையாடக் கூடா தென்று சர்க்கார் அறிவித்திருக்கிறது, காட்டுக்காகப் போடப்பட்ட சட்டம். ஆனால் நாட்டில் நடமாடும் அதி கார வெறி, எத்தனையோ தோகை மயில்களைத் துவளச் செய்திருக்கிறது. எத்தனையோ மான்விழியர்களின் மல்லிகை மேனியில் இரத்தக் கரை உண்டு பண்ணி யிருக்கிறது. காட்டிலே உள்ள மானும் மயிலும் காப்